பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

கருத்தே யில்லாமல் சும்மாயிருந்தார்கள். பொறுமையிழந்த கொலம்பஸ் மீண்டும் போர்ச்சுக்கல் அரசரை நாடிப் பார்க்கலாமா என்று எண்ணினான். போர்ச்சுக்கலில் முன்பு அவன் இருந்தபோது பலரிடம் கடன் வாங்கியிருந்தான். கடன்காரர்கள் அவன் திரும்ப வந்தால் கைது செய்து சிறையில் தள்ளத் தயாராக இருந்தார்கள்.

தன் வேண்டுகோளை மீண்டும் செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போர்ச்சுக்கல் அரசர் இரண்டாம் ஜானுக்குக் கொலம்பஸ் ஒரு கடிதம் எழுதினான். அவ்வாறு தன்னை அழைக்கும் போது தன் கடன்களுக்காகக் கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் அதே கடிதத்தில் குறிப்பிட்டு வேண்டிக் கொண்டான்.

அவன் வேண்டுகோளை அப்படியே ஏற்றுக் கொண்டு ஜான் அரசர் உடனே வரும்படியாகப் பதில் எழுதினார். போர்ச்சுக்கல் அரசரிடம் ஏற்பட்ட விசேஷ மாறுதலுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அண்டீலியாத் தீவைக் கண்டுபிடிக்க அவர் அனுப்பிய கப்பல் தலைவர்கள் பயனில் லாமல் திரும்பி வந்து விட்டார்கள். ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு இந்தியாவை யடைய வேண்டும் என்று போர்ச்சுகீசியர்கள் முன் பத்தொன்பது தடவை செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இருபதாவது முறையாகப் புறப்பட்டுச் சென்ற பார்த்தலோமியா டயஸ் என்ற கப்பல் தலைவனிடமிருந்து ஏழு மாதங்களாகியும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜான் அரசருடைய அழைப்புக் கிடைத்தவுடன், கொலம்பஸ் புறப்பட்டுப் போக முடியவில்லை. காரணம் வழிச்செலவிற்குப் பணம் இல்லாமையே. பணம் தயாரித்துக்கொண்டு கொலம்பசும் அவன் தம்பியும்