பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அந்தரங்கச் செயலாளன் கூறிய விளக்கம் பொருத்த மாயிருந்தது. கொலம்பஸ் வழிச் செலவுக்காகக் கேட்கும் மொத்தக் கூட்டுத் தொகையும் ஓர் அரசரின் ஒருவார ஆடம்பரச் செலவு தொகை அளவு கூட வராது. அவன் பட்டங்களும் பதவிகளும் உரிமைகளும் கணக்குப் போட்டுப் பார்த்தால், அவன் கண்டுபிடித்துக் கொடுக்கும் நாடுகளுக்குரிய முழுவிலையுமாகாது; ஒரு சிறு பங்கேயாகும்; புத்தம் புதிய நாடுகளை அரசுக்குச் சேர்த்துக் கொடுக்கும் ஒரு திறமையாளனுக்கு அந்த அளவு கூடக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயத்தைச் சேர்ந்தது? இவை யெல்லாம், நாடுகளைக் கண்டு பிடித்தால் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் அவன் உறுதி மொழி கேட்கிறான். கண்டு பிடிக்காவிட்டால் கொடுக்க வேண்டியவை அல்ல. கண்டு பிடித்தால் அவனுக்கு கொடுப்பதிலே அரசுக்கு எவ்விதமான நஷ்டமுமில்லை. வரும்படியைச் சேர்த்துத் தருகிறவனுக்குக் கொடுக்கிற ஒரு சிறு கூலியே யாகும்.

அந்தரங்கச் செயலாளன் எடுத்துக் கூறிய விளக்கங்கள் அரசி இசபெல்லாவின் உள்ளத்தைத் தொட்டன. அவள் உடனே ஆளனுப்பிக் கொலம்பசை வழிமறித்துக் கூட்டி வரச் செய்தாள். அந்தச் செயலாளனைப்போல் முன்னரே யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால் கொலம்பஸ் அத்தனை யாண்டுகள் வீணாகக் கழித்திருக்க நேர்ந்திராது.

1492-ம் ஆண்டிலேயே ஏப்ரல் மாதத்தில் கிரிஸ்டாபர் கொலம்பசுக்கும் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் - பேரரசிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி முத்திரையிடப் பட்டது. கொலம்பஸ் கூறிய நிபந்தனைகள் எல்லாம் அதில் கண்டெழுதப் பெற்றன. கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நிலப்பகுதிகட்கும். ஆட்சிக் குட்படுத்திக்