பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

கொடுக்கும் நாடுகளுக்கும் அவனும் அவன் பரம்பரையினரும் ஆட்சித் தலைவர்களாகவும் அரசப் பிரிதிநிதி களாகவும் இருக்க மாமன்னரும் பேரரசியும் சம்மதித்தனர். அவ்வாறு அவன் கடல் வழியில் நிலப்பகுதிகளைக் கண்டு பிடித்து ஆட்சியில் சேர்த்தால், அவனுக்கு பெருங்கடல் தளபதி (Admiral of the Ocean Sea) என்ற பட்டங் கொடுக்க மாமன்னரும் பேரரசியும் உறுதி கூறினர். மேற்படி நாடுகளிலிருந்து கிடைக்கும் தங்கம். இரத்தினம் வாணிபப் பொருள்களில் பத்தில் ஒரு பங்கு கொலம்பசைச் சேரும். அப்பொருள்களுக்கு அவனுக்கு வரி விலக்களிக் கப்படும். அப்பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்களில் எட்டில் ஒரு பங்கு அவன் மூலதனம் போடவும் உரிமையளிக்கப் படும். இந்த உரிமைகளும் சலுகைகளும் அவனுக்குப் பின் அவன் சந்ததியினரைச் சேரும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மாமன்னரும் பேரரசியும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர்.

மன்னரும் அரசியும் புதிய கடல் வழிகளில் செல்வதற்காக அவனுக்கோர் அடையாளச் சீட்டும் வழங்கினர். சீன நாடுகளை அக்காலத்தில் ஆண்டு வந்ததாகக் கருதப்பட்ட கான் பேரரசருக்கு ஓர் அறிமுகக் கடிதமும் மற்றும் தற்செயலாக அவன் போய்ச் சேரக் கூடிய பிற நாடுகளின் அரசர்களுக்கு அவர்கள் பெயர்களும் பட்டங்களும் தெரியாததால் பெயர் போடாததும் பின்னால் நிரப்பிக் கொள்ளக் கூடியதுமான இரண்டு அறிமுகக் கடிதங்களும் மாமன்னரும் பேரரசியும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

ஒப்பந்தம் முடிந்தபின் கொலம்பஸ் தன் பயணத்துக்குக் கப்பல்களும் ஆட்களும் சேர்க்கத் தொடங்கினான். கப்பல் தொழிலில் ஈடுபட்ட மூன்று குடும்பத்தினரிடமிருந்த சிறந்த கப்பல்களைப் பெற்றான். அந்த மூன்று கப்பல்களுக்கும் உரியவர்களே அவற்றில் அதிகாரிகளாக-