பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தது. ஆகவே அருகில் கரையிருப்பதற்கு வழியில்லை என்று கொலம்பஸ் கண்டு கொண்டான். உண்மையில் அந்த இடம் 2000 பாகங்களுக்கும் அதிகமான ஆழமுடையது.

ஒருநாள் பிண்டா என்ற கப்பலில் இருந்த மாலுமி ஒருவன் "அதோ கரை! அதோ கரை!" என்று கூவினான். கதிரவன் மறையப்போகும் அந்தத் தருணத்தில் மேல் திசையில் ஒரு புறத்தில் ஒரு தீவு இருப்பது போல் தென்பட்டது. உடனே மூன்று கப்பல்களையும் அத் திசையில் செலுத்தினார்கள். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் அந்தத் தீவு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. வேறு எந்தத் தீவும் புலப்படவில்லை. அடி வானத்தில் சூரியனின் செவ்வொளி பட்டுத் தெரிந்த ஒரு மேகத்தைத் தீவு என்று நினைத்துக்கொண்டு கூவியிருக்கிறான் அந்த மாலுமி. ஆனால், ஏதோ தீவு எங்கோ இருக்கிறது; நாம் திசைமாறி விட்டதால் தென்படவில்லை என்று சிலர் கருதினார்கள். அப்படிக் கருதியவர்களில் முக்கியமானவன் அலோன்சோபின்சோன். அவன் தான் பிண்டா கப்பலின் சொந்தக்காரனும் அதைத் தலைமை வகித்து நடத்தி வந்த கப்பல் தலைவனும் ஆவான். அவன் அந்தத் தீவைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கருதினான். ஆனால் இந்திய நாடுகளை விரைவில் அடைய வேண்டியது தான் இலட்சியம் என்றும், இடையில் எதையாவது தேடிக் கொண்டிருப்பது வீண் வேலையென்றும் கூறிக் கொலம்பஸ் மறுத்துவிட்டான். அக்டோபர் முதல் தேதி வாக்கில் மேலும் 400 மைல் அளவில்தான் கடந்திருந்தார்கள்.

புறப்பட்டு ஒருமாதமாகிவிட்டது. கடந்த மூன்று வாரங்களாக சுற்றிலும் நிறைந்த உப்புத் தண்ணீரைத் தவிர வேறு ஒன்றையும், ஒரு திட்டு நிலத்தையும் காண முடியவில்லை. ஏறக்குறைய 2000 மைல் தூரம் தாய்