பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அதன் வழியாக உள்ளே நுழைந்து காற்று வேகமில்லாத, நிலப்பகுதி சூழ்ந்த ஓர் இடத்தில் நங்கூரம் பாய்ச்சினார்கள்.

வெண்பவளப் பாறைகள் ஒளிவீசும் இந்தக் கடற் கரையில் தான் கொலம்பஸ் புதிய உலகத்தில் முதன் முதல் காலடி எடுத்துவைத்தான். கடல் தளபதி கொலம்பஸ் தலைமைக்கப்பலின் படகு ஒன்றிலே இறங்கி, ஸ்பெயின் அரசின் கொடியுடன் கரையில் வந்தேறினான். மற்ற இரு கப்பல் தலைவர்களும், நாடு கண்டுபிடிக்கும் அடையாளக் கொடியுடன் தங்கள் படகுகளில் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வெள்ளைத்துணியில் பச்சை நிறத்தில் சிலுவை பொறித்திருந்த அந்த அடையாளக் கொடி, கோட்டையும் சிங்கமும் பொறித்திருந்த நாட்டுக் கொடியைப் போலவே அழகுறக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

யாவரும் தரையில் மண்டியிட்டு இறைவனைத் தொழுது எல்லையற்ற கருணையாளனாகிய அவன் தங்கட்கோர் எல்லை காண்பித்ததற்காக நன்றி செலுத்தினார்கள். நெடுநாட்களுக்குப் பின் கண்ணாரக்கண்ட அந்தத் தரையை ஆனந்தக் கண்ணீர் விட்டு நனைத்துக்கொண்டே தழுவிக் கொண்டார்கள். கடல் தளபதி கொலம்பஸ் எழுந்து நின்று புனிதகாவலன் என்ற பொருள்படும் இறைவன் திருநாம மாகிய "சான் சால்வடார்" என்ற பெயரை அந்தத் தீவுக்குச் சூட்டினான்.

இந்த மூன்று கப்பல் தலைவர்களையும் கண்ட அந்தத் தீவுமக்கள் ஒரே ஓட்டமாக ஓடிக் காட்டுக்குள்ளே சென்று ஒளிந்து கொண்டார்கள். பிறகு, வந்தவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிடர்பிடித்துத் தள்ள, அவர்கள், சில பரிசுப் பொருள்களுடன் மெல்ல மெல்லத் திரும்பிவந்தார்கள். சட்டை