பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

களோ, ஒவ்வொருமுறை அவன் கேட்ட போதும் அடுத்த தீவில் நிறையக் கிடைக்கும்!" என்று தங்கள் சைகை மொழியின் மூலம் கூறிக் கொண்டு வந்தார்கள். தங்கத்தைக் காணும் ஆவலால் அவன் அங்கிருந்த கோணல் மாணல் தீவுகள் எல்லாவற்றையுமே சுற்றிப் பார்த்து விட்டான். ஆனால் தேடிப் போன தங்கம் தான் எங்கும் தட்டுப் படவேயில்லை. அவர்கள் மூக்குகளில் தொங்கிய தங்க வளையம் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. அதை அவர்களால் விளங்கச் சொல்லவும் முடியவில்லை. கொலம்பஸ் கூட்டத்தினரால் அதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

சில நாட்கள் பழகிய பிறகு, இரு சாராரும் ஓரளவு தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். கோல்பா என்ற பெரிய தீவு ஒன்று இருப்பதாக டாயினோக்கள் கூறினார்கள். அது தான் ஜப்பான் தீவாகவோ அல்லது சீனப் பேரரசின் ஒரு பாகமாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணினான் கொலம்பஸ், உடனே அதற்குப் போக வேண்டும் என்று துடித்தான். டாயினோக்கள் கொலம்பசைத் தாங்கள் வழக்கமாகச் செல்லும் ஓடப் பாதையில் அழைத்துச் சென்றார்கள். இரண்டு மூன்று தீவுகளைக் கடந்து கடைசியில் கோல்பாத் தீவில் உள்ள பாகியா பாரியே என்ற துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தத் துறைமுகம் மிக அழகாக விளங்கியது. இயற்கைக் காட்சியின் எழில் அங்குதான் பூத்துக் குலுங்கியது. ஆனால் அதுதான் ஜப்பான் என்பதற்குரிய அடையாளம் எங்கே? தங்கக் கோபுரங்களோடு கூடிய கோவில்கள் எங்கே? பறக்கும் நாகப்பாம்பின் வாய் போன்ற பீரங்கிகள் எங்கே? தங்கச் சரிகை மின்னிப் பளபளக்கும் பட்டாடையணிந்த சீமான்களும் சீமாட்டிகளும் எங்கே? எவ்விதமான சான்றும் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. அடுத்த நாள் அவர்கள் கியூபா என்று