பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

சுக்கான் அவன் கையில் தான் இருந்தது! சரியாகப் பணிரெண்டு மணிக்கு சாண்டா மேரியாக் கப்பல் மெல்லச் சென்று நீருக்கடியில் இருந்த ஒரு பவளப் பாறையில் மோதியது. அதிர்ச்சியைக் கேட்டு கொலம்பஸ் மேல் தட்டுக்கு ஓடி வந்தான். அவன் பின்னாலேயே கப்பலோட்டி லாகோசா ஓடி வந்தான். வேறு சிலரும் வந்தனர். கப்பலின் முன்பகுதி மட்டுமே யுடைந்திருந்தது கண்ட கொலம்பஸ், கப்பலைப் பின்னுக்கு நகர்த்துவதன் மூலம் எளிதாகக் காப்பாற்றி விடலாம் என்று கண்டு கொண்டான். கப்பலோட்டி லாகோசாவையும் சில மாலுமிகளையும் பின்பகுதி சென்று நங்கூரம் பாய்ச்சும்படி கட்டளையிட்டான். உயிருக்குப் பயந்த அந்தக் கோழைகள் உத்தரவுக்குப் பணியாமல் ஒரு படகை இறக்கிக் கொண்டு நைனா கப்பலுக்குச் சென்றார்கள். ஆனால், நிலைமையையுணர்ந்த நைனா கப்பலின் தலைவன் வைசென்டி பிக்சோன் அந்தக் கோழைகளைத் தன் கப்பலில் ஏற்றிக் கொள்ள மறுத்துவிட்டான். தன் கப்பல் ஆட்களை ஒரு படகில் இறக்கி சாண்டா மாரியாவின் உதவிக்கு அனுப்பினான்.

அவர்கள் வந்து சேர சுமார் ஒரு மணி நேரம் பிடித்தது. அதற்குள் சாண்டா மாரியாவின் அடிப் பகுதியும் பாறைகளின் கூர் முனைகளால் துளைக்கப் பெற்று உடைந்து போய் விட்டது, கப்பலில் நீர் குபுகுபுவென்று புகுந்தது. அதன் பின் கப்பலை விட்டுத் தப்பிப் போகும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டான். காலையில் குவாக்க நாகரியின் குடிமக்கள் சாண்டா மேரியாவைக் காப்பாற்றத் தீவிரமாக ஒத்துழைத்தார்கள். ஆட்களனைவரும் இரவே கப்பலை விட்டுத் தப்பி மறுக்கப்பல்களுக்குப் போய்விட்டார்கள். சிவப்பு இந்தியர்களின் உதவியால் கப்பலில் இருந்த சரக்குகளும், உணவுப் பொருள்களும் ஆயுதங்களும் காப்பாற்றப்பட்டு விட்டன. ஆனால் சாண்டா மேரியா-

கொ-4