பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வைக் காப்பாற்ற முடியவில்லை. குவாக்க நாகரியின் குடி மக்களாகிய அந்த சிவப்பு இந்தியர்கள் கப்பலிலிருந்து காப்பாற்றிய பொருள்களை யெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து கொலம்பசிடம் ஒப்படைத்தார்கள்.

தெய்வ நம்பிக்கையுடைய கொலம்பஸ், கப்பல் உடைந்ததன் காரணம் என்னவாயிருக்கும் என்று சிந்தித்தான். கப்பல் உடைந்ததை ஒரு சகுனமாகக் கொண்டால், அந்தச் சகுனத்தின் பொருள் என்ன என்று தீவிரமாகச் சிந்தித்தான். பக்தியோடு கூடிய அந்தச் சிந்தனையின் பலனாக அதன் பொருள் அவனுக்கு விளங்கி விட்டது. சாண்டா மேரியா கப்பலில் உள்ள மாலுமிகளைக் கொண்டு அந்தப் பகுதியை ஒரு குடியேற்ற நாடாகக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுகிறார் என்பதே சகுனபலன் என்று அவன் கண்டறிந்தான். தலைவன் குவாக்க நாகரியும் அந்தக் கருத்தை வரவேற்றான். வெள்ளையர்களின் துப்பாக்கி பலம் இருந்தால் பகைவர்களுக்கு அஞ்சாமல் வாழலாம் என்று எண்ணினான். அந்தப் பழங்குடி மக்களின் தலைவன். அந்தப் பகுதியில் தங்கம் நிறையக் கிடைப்பதற்குரிய அடையாளங்கள் தென்பட்டதால் மாலுமிகளில் சிலர் அங்கேயே குடியேறி வாழ ஒப்புக் கொண்டனர். எனவே கொலம்பஸ் அந்தப் பகுதியில் ஒரு கோட்டை கட்ட உத்தர விட்டான். சாண்டா மேரியாவின் உடைந்த மரத் துண்டுகளையும், பிறவற்றையும் கொண்டு கோட்டை கட்டினார்கள். அந்த இடத்திற்கு கிறிஸ்துமஸ் நகர் என்ற பொருள்படும் நாவிடாட் எனும் பெயரைச் சூட்டினான் கொலம்பஸ். சாண்டா மேரியாவின் மாலுமிகளில் பெரும் பகுதியினரும், நைனா கப்பலைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து அங்கேயே தங்கினார்கள். கொலம்பஸ் அவர்களுக்காக, வாணிபப் பொருள்களில் பெரும் பகுதியும் உணவுப் பொருள்களில் பெரும் பகுதியும். சாண்டா மேரியாவில் பயன்பட்ட படகுகள் அனைத்தையும் கொடுத்-