பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

விட்டால், அந்த ஊரைச் சுட்டுத் தீர்ப்பதாகவும், பதிலுக்கு ஆட்களைப் பிடித்துக் கொண்டு போவதாகவும் பயமுறுத்தினான்.

சிறிது நேரத்தில் ஒரு புயல் காற்று வீசியது. அதில் கப்பலின் கம்பிகள் அறுந்து போயின. கப்பலும் சிறிது தூரம் தள்ளிக் கொண்டு போகப்பட்டது. புயல் நின்று அது திரும்பி வருவதற்குள் தீவின் தலைவனுக்கு நல்ல புத்தி வந்து விட்டது. பிடிப்பட்ட மாலுமிகளைத் துன்புறுத்தியதிலிருந்து அவன் உண்மையை அறிந்து கொண்டான். அவர்களை விடுவித்ததோடு கப்பலுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் வழங்கினான்.

பிப்ரவரி மாதம் 24-ஆம் நாள் அங்கிருந்து இரண்டு கப்பல்களும் புறப்பட்டன. எவ்விதமான இடையூறுமின்றி ஒழுங்காகச் சென்றிருந்தால் ஒரு வாரத்தில் ஐரோப்பாவை எட்டிப் பிடித்திருக்கலாம். ஆனால் 26-ஆம் நாள் ஆரம்பித்த புயலில் நைனாக் கப்பல் திசை மாறி விட்டது. மார்ச் 2-ஆம் நாள் சுழல் காற்று வேறு சூழ்ந்து கொண்டது. எப்படியோ புயலுக்குத் தப்பி போர்ச்சுக்கல் நாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது கப்பல். அப்போது கப்பலில் கிழியாமல் இருந்தது ஒரே ஒரு பாய் தான். லிஸ்பன் துறை முகத்தில் கப்பலை நிறுத்திப் பழுது பார்த்துக் கொண்டு பிறகு புறப்படலாம் என்று எண்ணினான் கொலம்பஸ். ஆனால் இரண்டாவது ஜான் அரசன் தன்னை எப்படி நடத்துவானோ என்று ஒரு விதமான திகிலும் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் லிஸ்பன் துறைமுகத்தில் நுழைந்து கப்பலை நங்கூரம் பாய்ச்சினான். சிறிது தூரத்தில் ஒரு பெரிய யுத்தக் கப்பல் நின்று கொண்டிருந்தது. அதன் தலைவன் பார்த்தலோமியோ டயஸ் என்பவன். நன்னம்பிக்கை முனையைக் கண்டு பிடித்த பெருமையுடையவன். அவன் ஆயுதப் படை பொருந்திய ஒரு படகில் வந்து