பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

கொலம்பசை யுத்தக் கப்பலுக்கு வரும்படி அழைத்தான். கொலம்பசும் அவனும் முன்பே அறிமுகமானவர்கள்தான். இருந்தாலும் அவன் தன்னிடம் வந்து விவரம் கூறவேண்டுமென்று அதிகார தோரணையில் ஆணையிட்டான் டயஸ். கொலம்பஸ் இப்போது சாதாரணக் கப்பல் தலைவன் அல்லன்; புதிய நாடுகளைக் கண்டு பிடித்ததன் மூலம் ஸ்பெயின் பேரரசரால் கடல் தளபதி என்ற பெரும்பதவியை எய்தியவன். தன்னிலும் குறைந்த பதவியிலுள்ள ஒருவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்படுவது தன் மதிப்புக்கு குறைவு என்று கருதி, டயஸ் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தான். இருந்தாலும் தனக்குப் பதவி வழங்கிய பத்திரங் களை அவன் டயசுக்கு எடுத்துக் காட்டினான். டயசும் அதை ஒப்புக்கொண்டு நட்பு முறையில் நைனாக் கப்பலுக்கு வந்து கொலம்பசோடு அளவளாவினான். கொலம்பஸ் அனுமதி கேட்டு எழுதிய கடிதத்துக்கு ஜான் அரசரிடமிருந்து பதில் வந்தது. துறைமுகத்தில் கப்பல் தங்குவதற்கு அனுமதித்ததோடு உணவுப் பொருள்கள் ஏற்றிக் கொள்ளவும் அனுமதி கொடுத்திருந்தார். அத்தோடு தன்னை வந்து சந்திக்கும்படியும் அவனை வேண்டிக் கொண்டிருந்தார்.

கொலம்பஸ் மனத்திற்குள் ஒரு பெரும் போராட்டம் எழுந்தது. ஜான் அரசரைப் போய்ப் பார்க்காவிட்டால் அவருக்குக் கோபம் வரும். அவரைப் பார்த்து விட்டுப் புறப்பட்டால் முதலில் தன்னைப் பார்க்கவில்லை என்று அரசி இசபெல்லாவுக்குக் கோபம் வரும். யார் கோபத்தைத் தாங்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. வேண்டுகோளை மறுக்க முடியாமல் இரண்டு மூன்று மாலுமிகளையும், சில சிவப்பு இந்தியர்களையும் கூட்டிக் கொண்டு ஜான் அரசரைப் போய்ப் பேட்டி கண்டான். எல்லோரும் மட்டக் குதிரைகளில் ஏறிக் கொண்டு முப்பது மைல் தூரத்தில், ஜான் அரசர் தங்கியிருந்த ஒரு மடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே முன்பின் ஏறியறியாத கப்பலில்