பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71



எஸ்பானோலர் என்ற தீவு ஸ்பெயின் ஆளுகைக்குட்பட்ட நிலங்கள் அனைத்தையும் விடப் பெரியது. இங்கு தங்கச் சுரங்கங்கள் உள்ளன . இங்கிருந்து கொண்டு மற்ற தீவுகளுடனும், கான் பேரரசருக்குச் சொந்தமான மற்ற பகுதிகளுடனும் இலாபந்தரும் வாணிபம் செய்யலாம். இங்கு நான் ஒரு பெரிய நகரத்தை உரிமையாக்கிக் கொண்டுள்ளேன். இந்த நகரத்திற்கு லாவில்லா டி நேவி டாட் என்று பெயரிட்டுள்ளேன். இங்கு ஒரு பாதுகாப்புக் கோட்டை கட்டியிருக்கிறேன். இந்தக் கோட்டையில் நம் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுசரணையாக நம் ஆட்கள் சிலரைக் குடியிருக்கச் செய்திருக்கிறேன். அவர்களுக்குத் துணைக்கு வேண்டிய ஆயுதங்களும் வெடிமருந்துகளும், படகு ஒன்றும். ஓராண்டுக்குக் காணக் கூடிய உணவுப் பொருள்களும் விட்டு வந்திருக்கிறேன். இவர்களிடையே கடலனுபவம் மிகுந்த ஒரு தலைவனும் இருக்கிறான். இந்தத் தீவின் அரசன் என் சிறந்த நண்பன். அவன் என்னைத் தன் அண்ணன் என்றே பாராட்டுபவன். அவன் மனம் மாறி நம் ஆட்களுடன் பகைமை கொண்டாலும் கூடப் பயமில்லை. ஏனெனில் அவனுக்கோ அவனு டைய குடிமக்களுக்கோ ஆயுதங்களை உபயோகிக்கத் தெரியாது. மேலும் முன் நான் சொன்னபடி அம்மக்கள் மிகவும் அச்சமுடையவர்கள். ஆகவே, அங்கு நான் விட்டு வந்த சிறு கூட்டத்தினரே அந்தத் தீவு முழுவதையும் அழிக்க வேண்டு மென்றாலும் அழித்துவிடலாம். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருந்தால், தங்களுக்கு எவ்விதமான ஆபத்துமின்றி அவர்கள் நன்றாக வாழ்ந்து வரலாம்.


இந்தத் தீவுகளில் இருப்பவர்கள், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மனைவியே கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அரசன் மட்டும் இருபது மனைவிமார்