பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

வழங்கியிருக்கிறான். இந்தத் தீவுகளைப் பற்றி. இதற்கு முன் பேசியவர்களும் எழுதியவர்களும், இவற்றைப் பாராமலே பேசியும் எழுதியுமிருப்பதால், அவை யாவும் கட்டுக் கதைகள் போல் தோன்றுகின்றன. அவையெல்லாம் வெறும் அனுமானங்களே.

மேன்மைதங்கிய அரசருக்கும் அரசியார்க்கும், பெரும் வெற்றியைத் தேடித்தந்த கருணைமிக்க இறைவனுக்கு, நன்றி செலுத்தி எல்லோரும் தொழுது விழாக் கொண்டாடவேண்டும். இவ்வளவுபெரும் தொகையினரான மக்களை கிறிஸ்தவ சமயத்தில் சேர்க்கும் வாய்ப்பையளித்தமைக்கு ஸ்பெயின் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ நாடுகள் அனைத்துமே மகிழ்ச்சியடைய வேண்டும்.

சுருக்கமாக இருந்தாலும் மேற்குறித்தவைதான் உண்மையில் செய்யப்பட்ட செயல்களாகும்.

கானரித் தீவுகளைக் கடந்தபின் 1493 - ம் ஆண்டு பிப்பரவரி மாதம் 15 ம் நாள் கப்பலில் இருந்து எழுதியது.

தங்கள் பணிவுள்ள.
பெருங்கடல் தளபதி.

இக்கடிதத்துடன் இணைந்துவந்த குறிப்புச் செய்தி இது:

இதை எழுதியபின், ஸ்பானியக் கடலில் வந்து கொண்டிருக்கும்போது தெற்கிலும் தென்மேற்கிலும் எழுந்த ஒரு பெருங் காற்று கப்பலைத் தாக்கியது. ஆகவே, கப்பலை நான் காற்றின் போக்கில் விடவேண்டியிருந்தது. ஆனால் இன்று லிஸ்பன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தேன். இது உலகத்திலேயே மிக அதிசயம்தான். இங்கிருந்து நான் மேன்மைதங்கிய அரசர்க்கும் அரசியார்க்கும் கடிதம் எழுத