பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

வெள்ளிக் கம்பிபோல் மெல்லியதாக விழுந்து கொண்டிருக்கும் அழகை நேரில் பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும். மலையைத் தொட்டுக்கொண்டு நிற்கும் மேகங்களிலிருந்து நூலிழை ஒன்று. நழுவி விழுவது போல அந்தச் சிறு நீர்வீழ்ச்சி வீழ்ந்து கொண்டிருக்கும். தீவின் தென்பகுதியில் இருந்த ஒரு வளைகுடாவில் கப்பல்கள், ஐந்தாறு நாட்கள் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு நின்றன.

கொலம்பஸ் அங்கு ஒருநாள் மட்டுமே தங்க முடிவு செய்திருந்தான். ஆனால் கரையில் இறங்கி உள்நாட்டைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சிலர் காட்டுக்குள் வழிதெரியாமல் மாட்டிக்கொண்டு விட்டபடியால், அவர்கள் திரும்பிவரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விட்டுவிட்டுப் போய், மறுபடி அந்தப் பக்கம் வரும்போது அவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று புறப்படுவதற்கு கொலம்பஸ் மனம் இடந்தரவில்லை. ஏனெனில் அந்தத் தீவில் வாழும் கரீபியர்கள் மனித இறைச்சி தின்னும் பயங்கர மனிதர்கள் காணாமற் போனவர்களை விட்டுவிட்டுச் சென்றால், திரும்பி வரும்போது அவர்கள் எலும்புகளைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. காணாமற் போனவர்களைத் தேடி ஐம்பது ஐம்பது பேர் அடங்கிய நான்கு குழுக்கள் நான்கு வேறு வழிகளில் புறப்பட்டன. கடைசியில், அவற்றில் ஒரு குழு அவர்களைக் கண்டுபிடித்துக் கரைக்கு அழைத்து வந்தது.

ஸ்பானியர்கள் இவ்வாறு சுற்றித் திரிந்தபோது. கரீபியர்களைப் பற்றிய பல விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். கரீபியர்களின் சில குடிசைகளுக்குள் அவர்கள் இல்லாத பொழுது. நுழைந்து பார்த்த போது, அங்கு மனித எலும்புகளையும், வெட்டிவைக்கப்பட்ட மனித இறைச்சியையும், பாதி உண்ணப்பட்ட கறித்துண்டுகளையும் கண்டரர்கள். சில குடிசைகளில், இறைச்சிக்கா வளர்க்க