பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

இல்லை. எல்லாம் ஒழுங்கு பண்ணிக் கப்பலில் ஏற்றி அனுப்புவதென்றால் பல நாட்கள் செல்லும். ஆகவே அதிகமாக எதுவும் அனுப்பாததற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தியை டோரிஸ் மூலம் கேட்ட அரசரும் அரசியாரும், உயர்ந்த அரசப் பண்போடு, “எல்லாம் சரி' என்று சொல்லி விட்டார்கள். தங்கம் கண்டுபிடித்துக் கிடைக்கச் செய்த ஆண்டவன் அருளைக் குறித்து நன்றி கூறினார்கள்.

குடியேற்றத்திற்காக வந்துள்ளவர்களுக்கு, நாட்டுணவு ஒத்துக் கொள்ளாததால் ரொட்டி, ஊறிய மாட்டுக் கறி, மது முதலியனவும் பிற உணவுப் பொருள்களும் அனுப்பும்படி கொலம்பஸ் கேட்டிருந்தான். ஆடு, மாடுகளும், கழுதை, குதிரைகளும், ஆடைகளும், காலணிகளும் அனுப்பும்படி பேரரசியாருக்குச் செய்தி யனுப்பியிருந்தான். நூறு துப்பாக்கிகளும், நூறு வில்லும், இருநூறு மார்புக் கவசங்களும், ஏராளமான துப்பாக்கிக் குண்டுகளும் கேட்டிருந்தான். ஆடைகளும் காலணிகளும் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் அவன் கேட்டிருந்தபடியே அனுப்பும்படி அரசரும் அரசியும் கட்டளை பிறப்பித்தார்கள்.

டோரிஸ் மூலம் தான் அனுப்பிய செய்தியில் அடிமை வாணிபத்தை மேற்கொள்ளலாம் என்று யோசனை கூறியிருந்தான் கொலம்பஸ. ஆனால் அரசி இஸ்பெல்லா இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அது இலாபங்தரும் தொழில் அல்ல என்பதனால் தான் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தொண்டர்களாகப் புறப்பட்டுச் சென்ற இரு நூறு செல்வந்தர்களையும் மற்றவர்களைப் போலவே அரசாங்கச் சம்பளகாரர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று கொலம்பஸ் கேட்டிருந்தான். அப்போதுதான்