பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை. உணவும் நல்ல தண்ணீரும் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் தங்கம் கிடைக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் அவர்கள் இந்தத் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டார்கள்.

இசபெல்லாவில் தங்கியிருந்தவர்களின் நிலைமையோ மேலும் மோசமாயிருந்தது. இருப்பில் இருந்த உணவுகளெல்லாம் தீர்ந்து போய்விட்டது. ஆத்திரமும் வெறுப்பும் அதிகரித்துக் குழப்பமும் ஏற்படத் தொடங்கியது. தொல்லை கொடுக்கக் கூடியவர்கள், விலங்கிட்டு வைக்கப்பட்டார்கள். முன் எச்சரிக்கையாகக் கொலம்பஸ் ஆயுதங்களில் பெரும் பகுதியைத் தலைமைக் கப்பலில் வைத்திருந்தான். அவன் சகோதரனுடைய பாதுகாப்பில் அவையிருந்தன.

தொல்லை கொடுப்பவர்களை அகற்றுவதற்குக் கொலம்பஸ் ஒரு வழிவகுத்தான். தங்கம் கிடைக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஒஜிடா தலைமையில் மற்றொரு படையை அனுப்பி வைத்தான். ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சாண்டோ தோமாஸ் கோட்டையைப் பாதுகாக்கும்படி அந்தப் படைக்கு உத்தரவிட்டான். அதன்பின் தங்க ஆராய்ச்சி நடத்தச் சொன்னான். இந்தியர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ எச்சரித்தனுப்பினான். ஆனால் ஓஜிடா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டான். பழைய உடுப்புக்கள் சிலவற்றைத் திருடிக் கொண்டு ஓடினான் என்று சொல்லி ஓஜிடா முதலில் ஓர் இந்தியனுடைய காதையறுத்துவிட்டான். அடுத்தபடியாக அவர்களின் இனத் தலைவன் ஒருவனைக் குற்றம் சாட்டி விலங்கிட்டு இசபெல்லாவுக்கு நடத்திச் செல்லுமாறு செய்தான். கோட்டையை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பின், உடனிருந்த முந்நூறு வீரர்களுடன் வீகாரில் சமவெளியைச் சுற்றி வந்து, ஆங்காங்கேயுள்ள இந்தியர்களிட