பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பழக்கமெல்லாம் உடம்புக்கு ஒத்து வந்தவுடன், முதலையையே வேண்டுமானாலும் பிடித்துச் சாப்பிடுகிறோம்" என்று ஸ்பானியர்கள் வேடிக்கையாகக் கூறினார்கள். ஆனால், அந்த நகைச்சுவையை கியூபாக்காரர்கள் முழுமையாக இரசிக்க முடியவில்லை என்றாலும் கூடச்சேர்ந்து. சிரித்தார்கள்.

கியூபாவில் தங்கம் கிடைப்பதற்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை. எனவே. முதல் பயணத்தில் சாண்டியாகோவில் இருந்த இந்தியர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த ஜமைக்கா நோக்கிப் புறப்பட்டான். மே மாதம் 5-ம் நாள் ஜமைக்காவில் உள்ள செயின்ட் ஆன் வளைகுடாவில் நங்கூரம் பாய்ச்சினான், கப்பல்களைக் கண்டவுடன் அறுபதெழுபது இந்தியர்கள் இடத்தில் ஏறிக் கொண்டு, கப்பல்களைத் தாக்க விரைந்து வந்தார்கள். ஆனால், ஒரு பீரங்கிக் குண்டை வெடித்தவுடனேயே பேசாமல் கரைக்குத் திரும்பி விட்டார்கள். விறகும் தண்ணீரும் வேண்டியிருந்ததால், அடுத்த துறைமுகமான ரியோபோனோவில் கப்பல்களை நிறுத்தினான். அங்கும் இந்தியர்கள் எதிர்த்துத் தாக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். கப்பலிலிருந்து படகுகளில் புறப்பட்ட விற்படையினர், அந்த இந்தியர்களின் மீது அம்பெய்து சிலரைக் கொன்றுவிட்டார்கள். கரையை அடைந்தவுடன், இந்தியர்களின் மீது ஒரு பெரிய நாயை ஏவி விட்டான் அந்த நாய் இந்தியர்களை விரட்டி விரட்டிக் கடித்தது. இந்தியர் தொல்லையைத் தவிர்ப்பதற்கு இந்த நாய்களைப் பயன்படுத்தும் முறை இஸ்பானியோலாவிலும், அதற்கு முன் கானரித் தீவிலும் ஸ்பானியர்களால் பழக்கப்படுத்தப் பட்டிருந்தது. ரியோபோனோவில் இருந்த இந்தியர்களும் டாயினோ இனத்தார்களேயாவர். அவர்கள் ஸ்பானியர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் தங்கம் மட்டும் அவர்களால் கொடுக்க முடிய