பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

வில்லை. இருந்தாலல்லவா கொடுப்பதற்கு! எனவே, கொலம்பஸ், ஜமைக்காவில் மற்றொரு துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தி தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு, மீண்டும் கியூபாவுக்குத் திரும்பி அதன் தென்கரைப் பகுதியை ஆராயலானான்.

சீன நாகரிகத்திற்குரிய சான்றுகள் ஏதாவது தென்படுமா என்ற விழிப்புணர்ச்சியுடன் அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது சிறு தீவுகள் நிறைந்த கடல் அவர்கள் பார்வையில் பட்டது. இந்தத் தீவுக் கூட்டத்திற்கு இராணியின் தோட்டம் என்று கொலம்பஸ் பெயரிட்டான். இங்கு பெரிய கொக்குக்களைப் போன்ற ஆனால் சிவப்பு நிறமுடைய பறவைகளைக் கண்டனர். இங்குள்ள குடிமக்கள் பழக்கிய மீனைக் கொண்டு ஆமை பிடிக்கும் காட்சியையும் கொலம்பஸ் கண்டான். கொலம்பஸ் இதைக் கூறியபோது பலர் நம்பவில்லை. ஆனால் இன்றும் கையாளப்பட்டு வருகிறது.

அவர்கள் செல்லும் வழியில் டிரினிடாடு மலைத்தொடர் இருந்தது. அந்தக் கடற்கரையில் கப்பல்கள் ஒதுங்கிய போது அங்கிருந்த மக்கள் வானிலிருந்து வந்த மனிதர்களைப் பார்க்கத் திரண்டு வந்தனர். ஆனால் அவர்களில் யாரும் சீனாக்காரர்களைப்போல் இல்லை. சீனப் படகுகளோ ஓடங்களோ சீனக் கோயில்களோ, பாலங்களோ ஒன்று கூடத் தட்டுப் படவில்லை. கான் பேரரசருடைய இந்தப் பகுதிகளில் சீன நாகரிகம் பரவவில்லையோ என்னவோ!

டிரினிடாடில் இருந்த மொழி புரியாத மக்களை விசாரித்தறிந்ததில் மேற்கில் மாசோன் என்ற நாடு இருப்பதாகக் கூறினர். அதுதான் சீன நாட்டைச் சேர்ந்த, மாங்கியாக . இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டான் கொலம்பஸ்.