பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


芷á金 "அப்படியா, என்னவோ கெட்டது கடந்துவிட்டது என்று எனக்குத் தோன்றிற்று. ஆணுல், அம்மணிப்பாட்டி, இது எப்பொழுதும் இப்படியே இருக்காது. கடைசியிலே கல்லதிற்குத்தான் எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று அப்பா சொல்லுகிருர்...” என்ருள் ஜூடி. "கானும் அப்படித்தான் கம்புகிறேன். ஆளுல் அது ரொம்ப காளாகும். என் மகனும் அவன் குழந்தைகளும் ரொம்ப துரத்தில் இருக்கிருர்கள். ஜூடி, நீ லட்சுமிக்கு கடிதம் எழுது” என்று அம்மணிப்பாட்டி சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போய் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து வந்தாள். மற்றவற்றைப் போலவே பென்சிலேயும் அவள் தன் சேலேயில் முடிந்து வைத்திருந்தாள். காகிதத்தில் அவள் விலாசம் எழுதிக் கொடுத்தாள். இங்குதான் அவள் இப்பொழுது வசிக்கிருள். இதற்குப் பொன்னேரி என்று பெயர். இது ஒரு சின்ன கிராமமாக இருப்பதால் எல்லா எழுத்துக்களையும் எண்களையும் விடாமல் எழுதவேண்டும்”. “உங்களுக்கு நன்றி. கான் எழுதுகிறேன். இன்று இரவே எழுதுகிறேன். கொஞ்சம் தயவுசெய்து...” “சரி, மறுபடியும் வேலியைத் திறந்துவிடச் சொல்லு கிறேன்' என்ருள் அம்மணிப்பாட்டி.