பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாத்திரங்களே அடுக்கி வைத்திருந்த அக்தக்கடை ஒரு குறுகலான குகைபோன்றிருந்தது. பித்தளேப் பாத்திரங் களும், செப்புப்பாத்திரங்களும் மிகஅழகாக இருந்தன. தண் னிர்க் குடங்கள் தான் முக்கியமாக அழகு மிக்கவை. எந்த அளவில் வேண்டுமானுலும் அவற்றை வாங்கலாம். ஆளுல் அவை இந்தியாவிலேயே இப்பொழுது செய்யப்படும் எவர் சில்வர் பாத்திரங்களைப் போல அவ்வளவு பயன்படுவ தில்லே. கொதிகலத்தின் கைப்பிடியில் தன்னுடைய பெயரின் முதல் எழுத்துக்களைப் பொறிக்கும்படி அவள் தாய் சொன்னுள். ஒரு சிறிய மின்சாரத் துறப்பணத்தை எடுத்து ஒலியெழுப்பிக்கொண்டு ஒருவன் வேலை செய்தான். எழுத்துக்கள் பொறித்தாகிவிட்டன. "லண்டனிலே இதைச் செய்யச் சொன்னுல் வாரக் கணக்காக ஆகியிருக்கும்” என்ருள் அவள் தாய். எந்தச் சிறு காரியம் செய்யவேண்டுமானுலும் இவ்வாறுதான் விரைவில் முடிந்தது. அவள் தங்தை தன் மூக்குக் கண் ணுடியின் பக்கச் சட்டத்தை ஒரு கணத்திலே சரி செய்து கொண்டுவிட்டார். அதைச் சரிப்படுத்தியவன் அவ்வேலே யிலேயே மகிழ்ச்சியடைவதாகத் தோன்றிற்று. பிறகு அவர்கள் மோட்டார் வண்டி பழுது பார்க்குமிடத்திற்குச் சென்று புதிய டயர் கிடைக்க எத்தனே காளாகும் என்று கேட்டார்கள். இங்கிலாங்தைவிட இங்கே இதற்கு அதிக காள் பிடித்தது. பிறகு அவர்கள் இந்தியா காப்பி மாளி கைக்குச் சென்று ஒரு பவுண்டு காப்பித்துாள் வாங்கினர் கள்; ஒவ்வொரு கோப்பை காப்பியும் குடித்தார்கள். இவ்வாறு செய்துகொண்டிருக்கும் போதெல்லாம் ஜூடி தன் கடிதம் பொன்னேரிக்குச் சென்று லட்சுமிக்குக் .sس٫ கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பற்றியும்