பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F & லட்சுமி எப்பொழுது பதில் எழுதுவாள் என்பதைப் பற்றியுமே எண்ணிக்கொண்டிருந்தாள். வெள்ளம் மிகவும் குறைந்துவிட்டது. அவள் தாய் பூரிமதி ஞானம்மாளுடன் சேரிமக்கள் தங்கியிருக்த இடத் திற்குச் சென்ருள். கிலேமையைச் சமாளிக்க மக்கள் முயன்றுகொண்டிருந்தனர். நீரில் மூழ்கி இறந்தவளே அவளுடைய மக்கள் முறைப்படி தகனம் செய்துவிட் டார்கள். ஆளுல் சேரி மக்களில் வெகுபேர் பள்ளிக்கட்டத் திலேயே தங்கியிருக்க விரும்பினுர்கள், குடிசைகளுக்கு இருந்ததைவிட பள்ளிக் கட்டடத்திற்கு நல்ல கூரை இருக் தது. ஆனல் அங்கு தங்குவதென்பது முடியாது. அந்தப் பள்ளிக்கு வந்த குழந்தைகளை எங்காவது வைத்துப்பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஆதலால் சேரிமக்கள் கூடிய சீக்கிரத்தில் புதுக்குடிசைகள் அமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்வதுதான் முக்கியமான காரியம். அதற்கு அரசாங்க உதவியைப் பெற ஜூடியின் தாய் முயன்று கொண்டிருந்தாள். மூன்று நாட்களுக்குப் பிறகு ஜூடி தனக்குப் பதில் கிடைக்குமென்று எண்ணமிடத் தொடங்கினுள். மாதக் கணக்காக யாருக்கும் கடிதமே வராத சிறு கிராமத்திற்குத் தபால் போய்ச் சேர ஒருவேளை அதிக நாட்கள் ஆகலாம். ஆளுல் ஒரு வாரம் கழிந்தது; மற்ருெரு வாரமும் கழிந்தது. அப்பொழுதும் கடிதம் வரவில்லை. தபால் கிலேயம் இல் லாத ஒரு சிறு கிராமத்தில் லட்சுமிக்குத் தபால்தலை வாங்குவது கஷ்டமாக இருக்கலாம்” என்ருள் அவள் தாய், ஆளுல் லட்சுமிக்குப் பதில் எழுதவேண்டுமென்ற விருப்பம் இருக்தால் எப்படியாவது சமாளித்திருப்பாள் என்று ஜூடி கருதினுள். ஒருவேளை பதில் எழுத லட்சுமிக்கு விருப்ப மில்லேபோலும்.