பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

பள்ளியிலே சில விஷயங்கள் ஜூடிக்கு மிகமிகத் தொல்லை கொடுத்தன. ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டியது அவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டு. அதைப்பற்றி ஆரம்பத்திலேயே ஆசிரியை ஒரு விரிவுரை நிகழ்த்தினாள். இந்தியா ஒரே நாடு; அதற்கு ஒரே ஒரு பொதுமொழி அவசியம். அந்தப் பொதுமொழி ஆங்கிலமாக இருக்க முடியாது; என்ன இருந்தாலும் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழிதான். அதை யாரும் ஒப்புக்கொண்டுதானாகவேண்டும். தலைநகரத்தில் வழங்கும் மொழி ஹிந்தி; இந்து நாகரிகத்திற்கு அடிப்படையான பழைய நூல்களெல்லாம் எழுதப்பெற்றுள்ள பழைமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து அது தோன்றியிருக்கிறது. இந்தியாவின் வரலாற்றையும், சிங்தனைகளையும் புரிந்துகொள்ள விரும்பினால் ஹிந்தி கற்றுக்கொண்டே ஆகவேண்டும். இவ்வாறு ஆசிரியை கூறினாள். ஆனால், சென்னை வீதிகளிலே யாரும் ஹிந்தி பேசவில்லை; அவர்கள் அனைவரும் தமிழிலேயே பேசினார்கள். பள்ளியிலே பெரும்பாலான சிறுமிகள், ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும்போதும் விளையாடும்போதும் தமிழிலேயே பேசினர்கள். ஜூடிக்குக் கொஞ்சம் தமிழ் பேசவரும்; ஆனல் நன்றாக வராது. ஹிந்தியைவிடத் தமிழை அதிகமாகத் தெரிந்துகொள்ள அவளுக்கு விருப்பம். இருந்தாலும் ஹிந்தியை ஏன் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவள் ஏறக்குறைய உணர்ந்திருந்தாள்.

வேலைக்காரர்களோடு அவள் தமிழிலே சிறிது பேசுவாள். கறுப்பு மீசைக்காரனான ஜார்ஜ் சமையல் பணியாளாக இருந்தான். நல்ல ஆங்கிலத்திலே பேசமுடியுமென்று அவனுக்கு எண்ணம். ஆனால் சிலவேளைகளில் அவனைப் புரிந்துகொள்வது மிகக் கஷ்டம். பிறர் சொல்