பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பயிர்களோ பயிரிடப்பட்டிருந்த கிலங்களிலும் பெயர்க் குறிப்புச் சீட்டுக்கள் இருந்தன. தங்கும் விடுதிக்கும் போகும் வழியைக் குறித்துக்காட்ட ஒரு பெயர்ப் பலகையும் இருந்தது. அவர்கள் அங்கு போய்த் தங்கள் சாமான்களை வைத்தார்கள். அங்கு ஓர் இளைஞன் அவர்கள் வருகைக் காக காத்திருந்தான். மிகுந்த உற்சாகம் உள்ளவன் அவன். அவன் தான் செய்துகொண்டிருக்கிற காரியங்களே விளக்கிக் சொல்வதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். அந்த ஆவலின் வேகத்தில் சில சமயங்களில் அவனுக்குச் சரியான ஆங்கில வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. அப்பொழுதெல்லாம் பொறுமையிழந்து அவன் தன் கைகள் ஒன்றின்மேல் ஒன்றை அடித்துக்கொண்டான். அவன் வசம் ஒரு ஜீப் இருந்தது. அவர்களே அதில் ஏற்றிக்கொண்டு வேகமாக எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்தான். அரசாங்கத்திடமிருந்து கடன் பெற்று, கிராமப் பெண்கள் தையல் இயந்திரங்கள் வாங்கியிருங் தார்கள். அவர்கள் சிரமப்பட்டு வேலை செய்தால் சில ஆண்டுகளிலே அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட முடியும். பிறகு அவர்களுக்குச் சொந்த மாகவே தையல் இயந்திரம் இருக்கும்” என்ருன் அவன். மற்ருேளிடத்தில் நெசவுத்தறிகள் அமைக்கப்பட்ட இரண்டு அறைகள் இருந்தன. சில பெண்கள் துணிகெய்து கொண்டிருந்தார்க்ள். மரக்கட்டையில் சித்திரங்களைச் செதுக்கி அதைச் சாயத்தில் தோய்த்துச் சிலர் துணியில் பதித்துக்கொண்டிருந்தனர். அங்கோரிடத்தில் மூங்கிலிலிருந்து பென்சில் செய்துகொண்டிருந்தனர். களி மண்ணையும் கரியத்தையும் கொண்டு பெண்கள் பென் சிலின் உட்பகுதியை சமையல் செய்வதைப்போல வெகு சீக்கிரத்தில் செய்கிருர்கள். பென்சிலின் வெளிப்பகுதியை ஆண்கள் செய்கிருர்கள், காட்டாராய்ச்சி நிலையத்திலே