பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 அவள் தாய்க்குக் கொஞ்சம் கோபம். "ஜூடி, இடத் திலே உட்கார். முட்டாள்தனமாக கடந்து கொள்ளாதே’’ என்ருள் அவள். இருந்தாலும் ஜூடி முன்னுல் குனிந்து அந்த இளைஞனைப் பார்த்து, நீர்ப்பாசன வேலையைப் பார்த்துக்கொள்ள இங்கே எஞ்சினியர்கள் இருக்கிருச் களா?’ என்று கேட்டாள். "ஆமாம். நல்ல எஞ்சினியர்கள் இருக்கிருர்கள். அதோ பார், அதுதான் புதிய கால்வாய், வெள்ளத்தை அது தடுக்கும்...” என்று அந்த இளைஞன் பதில் சொன்னன். கால்வாயைப் பற்றி எத்தனையோ புள்ளிக்கணக்குகளை யெல்லாம் அவன் எடுத்துக் கொட்டினன். ஆனுல் எஞ் சினியர் பெயரை அவன் சொல்லவேயில்லை. புதிய கால்வாயில் தண்ணிர் கலங்கி இருந்தது. இருக் தாலும் பெண்களும் சிறுமிகளும் முழங்கால் அளவு தண் ணிருக்குள் கின்றுகொண்டு துணிகளைத் துவைத்துக் கொண்டும், பித்தளைப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டு மிருந்தார்கள். ஜூடி தன் தாயை இறுகப் பிடித்துக் கொண்டு “அதோ பார், அதோ, சரஸ்வதி அங்கிருக் கிருள்!” “கிச்சயமாகத் தெரியுமா? ஜூடி, என்னைக் கிள்ளிப் பிடிக்காதே’ என்ருள் அவள் தாய். அழுக்குப்படிந்த பழைய பாவாடைகளையும், ரவிக்கைகளையும் அணிந்துகொண்டு கால்வாய் ஓரத்தில் பாடிக்கொண்டே மணலை எடுத்து உற் சாகமாகப் பாத்திரங்களைத் தேய்ந்துக்கொண்டிருந்த சிறுமி களெல்லோரும் ஏறக்குறைய ஒரேமாதிரியாக இருந்ததால் அவர்களுக்குள்ளே சரஸ்வதியை அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.