பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. பொன்னேரியில் லட்சுமி குடிலின் மழமழப்பான மண்சுவர்களிலேகண்ணுக்குக் குளிர்ச்சியாகச் சித்திரங்களுடனும், எழுத்துக்களுடனும் சில சுவரொட்டி விளம்பரங்களிருந்தன. உள்ளே பெஞ்சு ஒன்றும் இல்லை; வெறும் தளம்தான். கரடுமுரடாகச் செய்த கரும்பலகை ஒன்றுமட்டும் இருந்தது. எல்லோரும் பார்க் கும்படியாக வெள்ளைச்சீமைச் சுண்ணும்பைக் கொண்டு லட்சுமி மெதுவாக எழுத்துக்களை மீண்டும் எழுதிக் காண் பித்தாள். அவள் களத்துப் போயிருந்தாள். சிலவேளை களில் அவள் உள்ளம் எங்கோ அலைந்தது. அறுந்துபோன அவளுடைய மிதியடியின் தோல்பட்டை தாறுமாருகத் தைக்கப்பட்டிருந்தது. அது அவள் கால் விரலைக்கடித்துத் தொல்ல கொடுத்தது. அவள் ஆசிரியை ஆதலால் மிதியடி அணிந்துகொள்ள வேண்டுமென்று கினைத்தாள்; வயது அதிகமானவளேப்போல மிதியடிகள் அவளுக்குத் தோற்றமளித்தன. வகுப்பில் இருந்த மற்றவர்கள் எல்லோ ரும் வெறுங்காலோடிருந்தனர். வயதான பெண்களில் சிலர் அவள் எழுதிய எழுத்துக்களைத் தங்கள் இதழ்களை அசைத்து அவள் முன் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் மூளையில்