பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஒன்றும் கிற்கவில்லை. எல்லாம் கொஞ்சமும் பழக்கப்படாத விஷயங்கள். கற்பதில் முன்னேறக்கூடிய சிறு வயதின ருக்கு இது சிரமமாக இருந்தது. படிப்பது, எழுதுவது ஆகிய புதிய வித்தையைத் தெரிந்துகொள்ள அவர்கள் பெரிதும் விரும்பினர்கள். வயது வந்தவர்களுக்கும் விருப்பம்தான். ஆளுல் அவர்களுடைய விருப்பம் கடவுளிடத்திலிருந்து ஏதாவது வரம் கேட்பதுபோலத் தெளிவற்றதாக இருந்தது; வரம் கிடைக்காவிட்டால் அது யாருடைய தப்புமில்லை. அதற்காக எதுவும் செய்யவும் முடியாது. சரியான முயற்சி என்பது அவர்களுக்கு அப்பாற்பட்டது. தனித்தனி இரண்டு வகுப்புகள் வைத்துக்கொள்ள லாமா என்று லட்சுமி சிந்தித்துப் பார்த்தாள். முன் வரிசை யிலே அவளேவிட வயதாகாத வள்ளி அமர்ந்திருந்தாள்; அவள் கிராமக் கொற்றனுடைய மகள் - அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், பத்திரிகைகளில் உள்ள தலைப்புக் களேயெல்லாம் இப்பொழுதே அவள் வாசிக்க முடியும், எளிமையான புத்தகங்களேயெல்லாம் இப்பொழுதே அவள் விரைந்து படித்தாள். அவள் மட்டும் சரியானபடி பள்ளிக் கும், கல்லூரிக்கும் கூட போக முடியுமானுல் ... ஆனல் வகுப்பை இரண்டாகப் பிரித்தால் வயதான பெண்களுக்கு வருத்தம் உண்டாகும். அவர்களில் சிலரைப் பள்ளிக்கு வரும்படி செய்ததே மிகுந்த கஷ்டமாக இருந்தது. லட்சுமி தனக்கு வயது அதிகம் என்பது போலக் காட்டிக்கொண் டாள்; ஆளுல் அவளுடைய உண்மையான வயதை சரஸ் வதி வெளியே சொல்லிவிட்டாள். அதல்ை இப்பொழுது எல்லாம் சரியானபடி நடக்காதபோது, கலியாணமான பெண்களில் சிலர் அவளைப் போன்ற சிறுமியிடம் தாங்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.