பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 37 என்று தடை விதித்திருந்தார். கல்ல விஷயங்களே மட்டும் தெரிவித்து அவர் உற்சாகமாகக் கடிதங்கள் எழுதினர். நான் சொல்லவே மாட்டேனென்று கொஞ்சம் பெருமை யோடு லட்சுமி எண்ணமிட்டாள். அதைவிட இறந்து போவது நல்லது; ஆல்ை ஜூடிக்கு பதில் எழுதினுல் விஷயங்களே மறைப்பது கடினம். பிறகு அவள் இங்கே வரலாம். அவளே வரும்படி நான் வேண்டிக்கொண்டது போலத் தோன்றும். அன்று கொடுமை செய்த அந்த ஆங் கில இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடத்திலே, வேண்டவே வேண்டாம். இருண்ட கிணற்றுக்குள்ளே போட்ட கல்லேப்போல அவள் வாழ்க்கையிலிருந்து நான் விலகிவிடுகிறேன். பட்டணங்களேயெல்லாம் அவள் படத்தில் குறித்தாள். எல்லாவற்றிற்கும் முதலாகப் பொன்னேரி. அது முதலில் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். அதன் பெயரைச் சொன்னுர்கள். பிறகு சென்னை. பிறகு வேறு நகரங்கள். அவர்களில் சிலருடைய சிற்றப்பனுே அல்லது சிற்றப்பன் மகனே பொருள் தேடி ஒருவேளை பெங்களுருக்கோ அல் லது காகபுரிக்கோ அல்லது அதற்கும் தொலைவில் பம்பாய் அல்லது கல்கத்தாவிற்கோ போயிருந்திருக்கலாம். அந்த இடங்களின் பெயர்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்; பிறகு அவள் அவர்களே எளிமையான கேள்விகள் கேட் டாள். வயது வந்த பெண்களில் ஒருத்திக்குப் படிக்கவே வரவில்லை. அவளுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டியிருந்தது. அவளைப் பார்த்து காந்திஜியைப் பற்றிச் சொல்லும்படி அவள் கேட்டாள். பிறகு மற்றவர்களெல்லாம் காந்திஜி யைப் பற்றிச் சொல்வதில் சேர்ந்துகொண்டனர். அவளும் தான் படித்த சில விஷயங்களையோ அல்லது தந்தையிட மிருந்து கேட்ட விஷயங்களையோ எடுத்துரைத்தாள்.