பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷金亨 'நிறைய நேரம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஜூடி தன் தாயிடம் ஓடி, மத்தியான உணவைக் கொஞ்ச கேரம் பொறுத்துச் சாப்பிடலாம் என்று சொன்னுள். பிறகு அவள் திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு தங்கும் விடுதித் தோட்டத்திற்குள் நுழைந்து சில மலர்களைப் பறித்து வந்தாள். லட்சுமியின் தலையில் வைத்துக்கொள்ளக் கொஞ்சம் ; மீதியுள்ள மலர்களே லட்சுமி சென்னே பிலிருக்கும்போது செய்ததுபோலத் தன் தலையில் வைப் பாள் என்று அவள் கம்பினுள். ஈரமாக இருக்கும் சுருள் சுருளான தனது நீண்ட கடந்தலை முதுகின்மேல் அவிழ்த்துவிட்டுக்கொண்டு லட்சுமி அவர்களோடு மத்தியான்ன உணவைச் சாப்பிடத் தொடங்குவதற்குள் லசுட்மியும், ஜூடியும் தங்களுக்குள் என்னன்வோ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டனர். லட்சுமியின் தோழிகளில் தனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி ஜூடி எடுத்துச் சொன்னுள். அம்மணிப் பாட்டியைப் பற்றி சமீபத்தில் தெரிந்த விவரங்களையும் தெரிவித்தாள். பெஞ்சமின் இப்பொழுது தமிழ் கன்ருகப் பேசத் தெரிந்து கொண்டிருந்தான். கடைசியாக அவர்கள் சுவையதிகமில்லாத ஒருவகை இனிப்புப் பண்டத்தை அருந்திக் கொண்டிருக்தனர். அது அதிகம் சூடாகவும் இல்லை ; அதிகம் ஆறிப் போயும் இருக்க வில்லை. ஆளுல் லட்சுமி அதை விரும்பித் தின்றுகொண் டிருந்தாள். அங்தச் சமயத்தில் ஷர்ட்டும், அரைக்கால் சட்டையும் அணிந்து கொண்டு அவள் தந்தை குமார் உள்ளே நுழைந்தார். மெலிந்தும், அதிகம் வயதானவரைப் போலவும் எப்படியோ அவர் தோன்றினர். அவர் அவசர மாகக் கொஞ்சம் சாப்பிட்டார். பிறகு அவரும், ஜூடியின் தந்தையும் கால்வாயை நோக்கி உலாவுச் சென்ருர்கள்.