பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15.3

  • மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் மிகவும் சிறியவள் என்று அவர்கள் கருதினுர்கள்’ என்ருள் லட்சுமி, ஒரு உண்மையான ஆசிரியர் வரும்வரையில்தான் திரும்பி வரப்போவதில்லை என்று கூறிக் கல்வி வகுப்பை உதறித் தள்ளிவிட்டுப் போன ஒரு மாதைப்பற்றி அவள் கினைத்துக் கொண்டாள். ஆளுல் வேறு பலர் வந்தனர். அவர்கள் வந்துகொண்டே இருந்தனர்.

'கீ கடிதம் எழுதுவாய் அல்லவா?’ என்று கேட்டாள் ஜூடி, "எழுதுவதற்கு என்ன இருக்கிறது? பார்க்கவேண்டி யதையெல்லாம் நீ பார்த்துவிட்டாய். லட்சுமிக்குத் திடீரென்று மிகுந்த சோகம் உண்டாயிற்று. ஜூடி திரும்பிப் போய்விடுவாள்-பழைய வாழ்க்கைக்கு அவள் சென்று விடுவாள். அவள் மட்டும் அங்கேயே இருக்கவேண்டும். 'வகுப்பு எப்படி கடக்கிறது என்று தெரிந்து கொள்ள கான் ஆசைப்படுவேன். அதைப்பற்றி யெல்லாம் கான் அம்மணிப்பாட்டிக்குச் சொல்லுவேன்.” 'பாட்டிக்குச் சொல்லவேண்டாம்......"என்று ஆரம்பித் தாள் லட்சுமி. பிறகு, "ஜூடி, ஒரு பழயை கந்தலான சேலையை கான் கட்டிக்கொண்டிருந்ததாகப் பாட்டியிடம் தயவு செய்து சொல்லாதே. குளிக்கச் சரியான வசதியில் லாதைப் பற்றியும் என்தந்தையின் தோற்றத்தைப் பற்றியும் சொல்லாதே-” & 'எனக்கு எல்லாம் புரிகின்றது. கம் தோழிகளில் ஒரு வருக்குக்கூட நான் சொல்லமாட்டேன். ஆனல் என்ன இருந்தாலும், நீ பாடம் சொல்லிக் கொடுப்பதிலிருந்து உனக்கு மிகுந்த திறமை இருக்கிறதென்று நான் கருது கிறேன்” என்ருள் ஜூடி.