பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

கூடுகள் கட்டியிருந்தன. இங்குமங்குமுள்ள கோயில்களுக்கும் அவர்கள் சென்றனர். ஆனால் வெப்பம் அதிகமாகும் பொழுது காரில் செல்வதே அலுப்பாக இருந்தது. பலரை ஒருங்கே எக்ஸ்-கதிர் போட்டோ பிடிக்கும் கருவிகளுடன் ஒரு சனிக்கிழமையன்று அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார்கள். பெயர்ப்பட்டியல்களில் குறியிட்டு டாக்டர்களுக்கு ஜூடி உதவி செய்தாள். எத்தனை பேருக்கு சனயநோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்குத்தான் இப்படிச் செய்தார்கள். சனயநோய் உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் அவர்கள் குணமடைய வாய்ப்புண்டு. அங்கே பலபேர் மெலிந்து தோன்றினார்கள். அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. அரிசிச்சோறுதான் உண்டு. இன்னும் கொஞ்சம் அதிகமாக அவர்களுக்குப் பால் கிடைக்குமானால் அவர்கள் நிலைமை இவ்வளவு மோசமாக இராது என்று ஜூடியின் தாயார் கூறினாள். “ஒரு நாளைக்கு நாம் தேசீய விஸ்தரிப்புத் திட்டம் கடைமுறையிலுள்ள ஓர் இடத்திற்குப் போய் அங்கு நிலைமை எப்படியிருக்கிறதென்று பார்ப்போம்” என்று அவள் தெரிவித்தாள்.

“தேசீய விஸ்தரிப்புத்திட்டம் என்ருல் என்ன?” என்று ஜூடி கேட்டாள்.

“லட்சக்கணக்கான மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்கு உதவி செய்வது இந்தியாவில் மிக முக்கியமானது. அங்கே உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும். இந்திய அரசாங்கம் இரண்டு காரியங்களைச் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறது. விவசாயத்தை அபிவிருத்தி செய்யவேண்டும்; நல்ல விளைச்சல்:உண்டாக்கவேண்டும்; வெவ்வேறு வகைத் தானியங்களை விளைவிக்கவேண்டும்; நல்ல கால்கடைகளை வளர்க்கவேண்டும். இப்படிப் பல பணிகள் செய்வதோடு, மிகுந்த பயனுள்ள வாழ்க்கையை