பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ஊக்கம் அளிக்கும் முறையிலே சொக்கப்பனக் கொளுத்தி னர். பொங்கல் பாட்டுக்களையும் பாடினர். இரண்டாம் நாளில் புத்தரிசியிட்டுப் பால் பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் வைத்து உண்டனர். இட்டலியை விட இது சுவை மிகுந்திருந்தது. மூன்ரும் நாளன்று அதேமாதிரி பொங்கலப் பசுக்களுக்கும், எருதுகளுக்கும் வைத்தனர். அவற்றை நன்ருகத் தேய்த்துக் கழுவிக் கொம்புகளுக்குச் சாயம் அடித்தனா. நுகத்தடிகளையும், தலைக்கயிறுகளையும் அலங்காரம் செய்தனர். எருமை களையும் அலங்காரம் செய்தனர். குமாரிடம் ஒரு மெலிந்த பசு இருந்தது. அவரும் லட்சுமியும் மற்ற குழந்தைகளும் சேர்ந்து அதைத் தேய்த்துக் குளிப்பாட்டிப் பிடித்துக் கொண்டு அதன் கொம்புகளுக்குச் சாயம் அடிக்கத் தொடங்கினர். அவர் மனைவி நீண்டகாலமாக ஒரு மாடியில் வசித்து வந்ததால் அவள் பசுவின் கொம்புகளுக்குச் சாயம் அடித்து வருடக்கணக்காக ஆயிற்று. அவர்கள் எல்லோ ரும் சேர்ந்து தாறுமாருகச் சாயத்தை பூசிக்கொண்டிருக் தார்கள், ஆணுல் அந்தச் சமயத்தில் வள்ளியின் தங்தை யாகிய கொற்றன் அங்கு வந்து உதவி செய்தான். ஒரு கொம்பில் சிவப்புச்சாயம்; மற்ருென்றில் பச்சைச் சாயம்; அவற்றின் மேலே சிறுசிறு பூச்சித்திரங்கள். கடைசியில் இவ்வாறு பொன்னேரியில் அந்தப் பசுதான் மிக கன்ருகக் காட்சியளித்தது. அங்கே ஒருவகையான ஆடலும் இருந்தது. ஆனல் அது லட்சுமி பார்த்திருந்த எல்லா ஆட்டங்களையும் விடத் தரம் குறைந்திருக்தது. ஆடும்பொழுதே வெறும் கூச்சல் போட்டார்கள். எல்லாக் கிராமங்களிலும் இவ்வாறுதான் கடந்தது. சொக்கனேக் கொளுத்தும் நாளன்று இரவிலே இந்தியாவின் பெரிய கிழக்கு சமவெளிப் பிரதேசமெங்கும்