பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 நெடுந்துாரத்திற்குத் தீக்கொழுந்துகள் மினுக்கிடுவதை அவர்கள் கண்டனர். 'அம்மணிப்பாட்டியின் பசுக்களைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றுகிறது” என்ருள் சரஸ்வதி. சென்ற ஆ ண் டு க ளி .ெ ல ல் ல ம் அவர்கள் அவற்றைப் பார்க்கச் சென்றிருந்தனர். அவர்களுக்குப் பட்சனங்களும், காப்பியும், சில வேளைகளில் பரிசுகளும் கிடைத்தன. 'ஜூடி அவற்றைப் போய்ப் பார்ப்பாள். ஒரு வேளை கடிதமும் எழுதுவாள்' என்ருள் லட்சுமி, ஜூடி அவ்வாறு தான் செய்தாள். ஜூடியும் பெஞ்சமினும் வேலிச்சந்து வழியாக வந்து காவேரியையும், கோதாவரியையும், சிறு கொம்புகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்த மூத்த கன்றை யும் தேய்த்துக் கழுவி அலங்காரம் செய்வதைக் கவனித் துக்கொண்டிருந்தனர். சென்னை நகரத்து வீதிகளில் எங்கும் இவ்வாறுதான் கடந்தது. வண்டிகளில் பூட்டப்பட்ட எருதுகளும், எருமைகளும் கொம்புகளுக்குச் சாயம் தீட் டப்பட்டிருந்தன. ஒரு கொம்புக்கு ஒரு கிறமும், மற்ருெரு கொம்புக்கு வேருெரு கிறமும் சாதாரணமாக அடித்திருக் தனர். ஆனல் பெரும்பாலானவற்றிற்குச் சாயத்தோடு, கொம்பு முனையிலே தங்கப்பூச்சுப் பூசிப் பூக்களையும், இறகு களையும் அவற்றில் சூடியிருந்தனர். சென்னையில் விழா என்ருல் கல்ல பூக்களைத் தேடுவதற்கு அது ஒரு சக்தர்ப் பம். அவர்களே அவற்றைப் பறித்துக் கட்டி னர். அல்லது இழைகளில் கட்டிவிற்கும் பூக்கடைகளுக்குச் சென்று அவற்றை வாங்கி வந்தனர்; அல்லது ஒவ்வொரு மாலை கேரத்திலும் பூக்காரன் வீட்டிற்கு வந்தான். சென்னை யிலே பூக்கள் மலிவாகக் கிடைத்தன. இங்கிலாந்திற்குத் திரும்பியபின் ஜூடி இந்தப் பூக்களையும், நிறங்களையும் காண இயலாது.