பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 திற்கான ஒரு கம்பளி அரைச்சட்டையும் அவள் தரித் திருந்தாள். குதுப்மினரில் உள்ள மாடி முகப்புக்களிலே முதல் முகப்பிற்கு அவர்கள் வந்தார்கள். கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு பார்த்த போது ஜூடிக்குத் தல் சுற்றிற்று. கைப்பிடிச்சுவர் மிகக் குட்டையாக இருப்பது போலவும், கீழே தரை வெகு துரத்தில் இருப்பது போலவும் தோன்றின. பூத்தோட்டங்கள் மாகிறமான சிறு புள்ளி களேப்போன்ற முகங்களோடு அவற்றில் கடந்து கொண்டும் மேலே கோக்கிக்கொண்டும் இருந்த மக்களோடு அவ்வாறே தொலைவில் தோன்றின. உச்சியிலிருந்து திலீப் கூவி பழைத்தான். அதனுல் அவர்கள் மேலும் ஏறத் தொடங் கினர். மேலேயுள்ள மாடி முகப்புக்களிலே இன்னும் தொல்லேயாக இருந்தது. அங்கிருந்து பழைய மொகலாய கோரிகள் அல்லது மசூதிகளின் கும்மட்டங்களையும் சுவர் களையும் காணமுடியும். சில அழிந்துபோயும், சில உறுதி யாகவும் இருந்தன. அவற்றிற்கும் அப்பால் டெல்லி ககரம் பரந்து கிடப்பதையும் அங்கிருந்து காணலாம். புதுடெல்லி சுத்தமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள உண்மையில் விருப்பமில்லாவிட்டாலும், ஜூடி அதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. எங்கு வேண்டு மானுலும் கடந்து செல்லலாம் அல்லது கடைகளுக்குச் சென்று சாமான் வாங்கலாம்-எத்தனை சுவையான இனிப்புப் பட்சணங்கள்!-எங்குமே பிச்சைக்காரர்களோ, பட்டிமாடு களோ, எருமைகளோ இல்லை. மெலிந்திருக்கும் ஏழை மக்களால் செலுத்தப்படும் சைக்கிள் ரிக்ஷாக்களையும் பார்க்க முடியாது. அவற்றிற்குப் பதிலாக கான்கு பேர் ஏறக்கூடிய மூன்று சக்கர வாடகைக்கார்கள் இருந்தன. அவற்ருேடு சாதாரண வாடகைக் கார்களும், ஏராளமான