பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மோட்டார்க்கார்களும் இருந்தன. திருமதி ராவுடன் அவள் ஒரு சமயம் வெளியே சென்றிருந்தபோது சாலைக்கு அடுத்த பக்கத்தில் இருந்த தாழ்வான ஒரு பெரிய மாளிகைக்கு முன்னல் ஒரு அரசாங்கக் கார் வந்து கின்றது. பழுப்பு கிறமான அங்கி அணிந்து அதிலே ஒரு சிவப்பு ரோஜா வைக் குத்தியிருந்த ஒருவர் அதிலிருந்து வெளியே வந்தார். "அவர்தான் பிரதம மந்திரி'; என்ருள் திருமதி ராவ். பிறகு அவள், கடவுள் அவரைக் காப்பாராக" என்று மெது வாகத் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டாள். யாரைப் பற்றித் தன் தந்தை விரிவாகக் கூறியிருக்கிருரோ அந்த கேருதான் இவர் என்று ஜூடி எண்ணமிடத் தொடங்கிள்ை. அழகாகவும், துயரம் கலந்த பார்வையுடனும் அவர் தோன் றிஞர். அளவற்ற அன்புடையவர் என்று அவளுக்கு எப்படியோ உணர்ச்சி ஏற்பட்டது. வழியறியாது மயங்கிய காலத்தில் அவரைப் போன்றவர்களிடம் தான் வழி கேட்க லாம். உடுப்பணிந்து கொண்டிருந்த ஒருவன் அவருக்கு வணக்கம் செலுத்தினன். சிவப்பு ரோஜாவை அணிக் திருந்த அம்மனிதர் மாளிகைக்குள் நுழைந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு வந்த ஞாயிறன்று சுற்றிப் பார்ப்பதற்காக ஜூடியையும், அவள் தங்தையையும் டாக்டர் ராவ் தமது காரில் அழைத்துச் சென்ருர், அந்தச் சமயத்தில் அவள் தங்தை, ஜூடி, லட்சுமியின் தந்தை யான குமாருக்கு ஏதாவது கன்மை ஏற்படலாமென்று தோன்றுகிறது. அவர் விஷயத்தைப்பற்றி இங்கு தெரிக் திருக்கிறது” என்று கூறினர். 'எனக்கு கிச்சயமாகத் தெரியாது; ஆனல் மத்திய அரசாங்கத்திலே அந்த ஒரு சிலருக்கு அதே அளவு செல்வாக்கு இல்லையென்று தோன்றுகிறது..." என்று அவர் மேலும் கூறினர்,