பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置&会 அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டார்கள். ஒரு கொடியிலே அவன் பெரிய யானையின் மேல் ஒருவகை யான மெத்தையைப் போட்டான். அந்த மெத்தையின் நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய கழிகளும் கால் வைக்க ஒருபடியும் இருந்தன. வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதி யிலே முன்பு வேருெரு யானையின்மேல் ஏறியது போலவே ஜூடி இந்த யானையின் பின்னங்கால் ஒன்றின் மேலும் கொக்கி போல் வளைந்த அதன் வாலின் மேலும் கால் வைத்து மேலே ஏறினுள். அப்படி ஏறும்பொழுது அவள் யானையைத் தட்டிக் கொடுத்தாள்; ஆளுல் அப்படி யானே யைத் தட்டிக் கொடுப்பது பயனற்றது என்ற எண்ணமும் அவளுக்கு உதயமாயிற்று. பிறகு படகு ஆடுவதை நினைவு அத்தும் வகையில் ஆடிக்கொண்டு அது எழுந்தது. ஜூடி கழி ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டாள். மரங்களுக்கும் பறவைகளுக்கும் அருகிலே உயர்ந்திருக்கும்படியான இன்ப உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவர்கள் சுற்றி வந்து, முன் பக்கத்தில் அவள் தந்தை யும் காட்டு அதிகாரியும் கோப்பை கோப்பையாகத் தேனிர் அருந்திக்கொண்டிருக்கும் தாழ்வாரத்திற்கு வந்தனர். வட இந்தியாவில் மக்கள் இவ்வாறு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கொரு தடவை தேனீர் அருந்துவதாகத் தோன்றி யது. அவள் தங்தை ஒரேடியடியாகச் சிரித்தார். காட்டு அதிகாரி முன்னுல் வந்து, வயது முதிர்ந்த பெண்யானை ஒன்றின் மேல் ஜூடி ஏறிக்கொண்டிருப்பதாக அவளிடம் தெரிவித்தார். அந்த யானைக்கு அநேகமாக நூறு வயது ஆகியிருந்தது. அது இளமையோடிருந்த காலத்தில் ஒரு சிறந்த வேட்டை யானையாக விளங்கிற்று. புலியின் நகங் களால் அதன் கழுத்தில் ஏற்பட்டிருந்த வடுக்களை கோக் கும்படி அவர் தெரிவித்தார். அந்த யானை அவரை நோக்