பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


185 கித் துதிக்கையை ஆட்டிற்று. 'அதற்கு என்ன வேண்மோ அதை எப்பொழுதும் நான் செய்தாக வேண்டுமென்பது அதன் கருத்து' என்று அவர் அன்போடு சொல்லிவிட்டு, தேங்காய் ஒன்று கொண்டு வரும்படி ஒருவன ஏவிஞர். அத்தேங்காயை அந்த யானை அப்படியே வாயில் போட்டு கொறுக்கித் தின்றது. சவாரி முடிந்த பிறகு அவர் ஜூடி யிடம் ஒரு இலையிலே பெரிய கட்டியாகச் சிவப்பு சர்க் கரையை வைத்துக் கொடுத்தார். அந்த யானைக்கு அதி லும் மிகுந்த விருப்பமுண்டு. அந்த யானையின் உண்மையான வேலை காட்டுக்குள் ளிருந்து மரக்கட்டைகளை இழுத்து வருவதாகும். ஆனல் ஜூடியைத் தன் முதுகின்மேல் வைத்துக்கொண்டு சுற்றி வந்து, தனிப்பட்ட கல்ல உண்டி பெறுவதையும் அது மிகவும் விரும்பிற்று. காட்டில் திரியும் யானைகளைப் போலவே இந்த யானையும் மகிழ்ச்சியோடிருப்பதாக ஜூடிக் குத் தோன்றியது. அங்கு தங்கியிருப்பதற்குள் அந்த யானை தன்னை இன்னுரென்று தெரிந்துகொண்டதையும் அவள் தெளிவாகக் கண்டாள். மேலும் யானைகளைப் பற்றிய எத்தனையோ சுவையான ஹிந்திச் சொற்களையும் அவள் கற்றுக்கொண்டாள்.