பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 யெல்லாம் அவள் தாய் கொடுத்துப் பார்த்தாள். அது சாதாரணமான காய்ச்சல் அல்ல. துணிகளைத் துவைத்துக் கொண்டும், பாத்திரங்களைத் துலக்கிக்கொண்டும் மற்ற சிறுமிகளோடு சேர்ந்து அந்த மோசமான கால்வாய் நீரில் காலே வைத்து கடந்ததஞல் தான் அது வந்திருக்கவேண்டு மென்று அவள் கடறினுள். அவ்வாறு இருக்கலாமென்று லட்சுமி கவலையோடு தெரிவித்தாள். ஆஸ்பத்திரிக்கு சரஸ் வதியை எடுத்துச் சென்றனர். அங்கு அவளைப் பரீட்சை செய்து பார்த்துவிட்டுச் சில மாத்திரைகளைக் கொடுத்தனர். அவற்றிற்காக அவள் தாய் பணம் வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தினுள். இலவசமாகக் கிடைக்கும் மாத்திரை களேவிடப் பணம் கொடுத்து வாங்கினுல் கல்ல மாத்திரை கள் கிடைக்கும் ஆணுல் சரஸ்வதி குணமடையவில்லை; அவள் கிலேமை இன்னும் மோசமாயிற்று. கடைசியில் லட்சுமி தன் தந்தையை நோக்கி, "இப்படி காம் கெளரவம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்படியிருந்தால் என் தங்கை சாகவேண்டியதுதான். அம்மணிப்பாட்டிக்கு நீங் கள் கடிதம் எழுதுங்கள். இல்லாவிட்டால் நான் எழுது வேன். சரஸ்வதியைச் சென்னைக்கு அழைத்துக்கொண்டு போய் ஜூடியின் தங்தை பணிசெய்யும் ஆஸ்பத்திரியில் காண்பிக்கவேண்டும்" என்று சொன்னுள். குமார் தன் மகளே உற்று நோக்கினர். தன்மனேவியின் சார்பாக அவள் பேசுகிருள் என்பது அவருக்குத் தெரியும். கிலேமையைக் கவனிக்கிற போது அவள் சொல்லுவது சரியென்பதையும், தாம் தோல்வியடைந்ததையும் அவர் கண்டார். 'கான் கடிதம் எழுதி அம்மணிப்பாட்டிக்கு இங்குள்ள கிலேமையைத் தெரிவித்தால் உடனே அவள் உன்னே அங்கு வரும்படி சொல்லுவாள்.அது எனக்குத் தெரியும். உன்