பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 தாயும், நீங்கள் எங்லோரும் அங்கு போயாக வேண்டும்’ என்ருர் அவர், 'அப்பா, நீங்களும் தானே?” அவர் வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டார். 'கான் இங்கிருந்தாக வேண்டும். இந்த ஒரு வேலை எனக்கிருக்கிறது. எவ்வளவு பணம் என்னுல் அனுப்ப முடியுமோ அதை அனுப்புகிறேன். உன் தாய் இந்த இடத்தை எப்பொழுதும் வெறுத்துக் கொண்டிருக்கிருள். பார்ப்பதற்கு அவள் வயதானவளைப் போலத் தோன்று கிருள். இப்பொழுதெல்லாம் அவள் பாடுவதேயில்லை."

  • நீங்கள் துணையில்லாமல் தனியாக இருப்பீர்கள். யார் உங்களுக்குச் சமைத்துப் போடுவார்கள்?’ என்ாள்

ளுககு தது டு லட்சுமி. "நான் சமாளித்துக்கொள்வேன். யாரிடத்தில் நமக்கு விசேஷமான அன்பு இருக்கிறதோ அவர்களேயெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்குவதைவிடத் தனியாக இருப்பது கல்லது’ என்ருர் அவர். "அப்பா நீங்களொன்றும் தவறு செய்துவிடவில்லை. நீங்கள் இங்கேயே இருப்பதானுல் நானும் உங்களுடன் இருக் கிறேன்” என்ருள் லட்சுமி. 'அம்மா இல்லாமல் நீ மட்டும் தனியாக இங்கிருக்க முடியாது-வேறு யாராவது பெண்களிருந்தாலும்......” அக்த இடத்திலே அவர் தயங்கியதையும் அவருடைய கண்களிலே ஒளிபிறந்ததையும் லட்சுமி நன்ருகக் கண்டாள்.வயதானவர் களைப்போல அவள் தன் சேலையை மடித்துவிட்டுக் கொண் டாள். அப்பா, கான் நிச்சயமாக இங்குதானிப்பேன். நான் அறிவுவாய்ந்த இந்தியாவின் புதுமைப்பெண்களில் ஒருத்தி.