பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

சிரிப்பு பொத்துக்கொண்டுவரும். அவளுடைய தந்தை அரசாங்கத்திலே ஏதோ ஒரு உத்தியோகம் வகித்தார். எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதுபோல அவர் காணப்பட்டார்.

கல்யாணம் நடைபெற்ற அண்டை வீட்டுக்காரர் அதிகமாக மற்றவருடன் பழகமாட்டார்கள். அவர்கள் ஒரு பெரிய கார் வைத்திருந்தனர். அந்த வீட்டுப் பையன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உண்டு. அதில் ஏறிக்கொண்டு அவன் எப்பொழுதும் வெகு வேகமாகப் போவான். அந்த வீட்டாருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத்தான் கலியாணம் நடைபெற்றது.

மற்ற பக்கங்களில் உள்ள அண்டை வீட்டார்களா?

காக்காப்பூக்கொடி படர்ந்திருக்கும் வேலிக்குப் பின்னால் இருக்கும் வீட்டைப்பற்றி எண்ணி ஜூடி அடிக்கடி ஆச்சரியப்படுவாள், ஜூடி வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அந்த வீட்டிலுள்ள தோட்டம் நன்றாகத் தெரியும். அந்தத் தோட்டம் அழகாக இருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் அம்மாள் தானாகவே தோட்டவேலை செய்வாள். தாழ்வாரத்தைச் சுற்றிலும் பூங்தொட்டிகள் எப்பொழுதும் இருக்கும். அதிகாலையிலே அந்த அம்மாள் பூப்பறிக்க வருவாள். அவள் கட்டியிருக்கும் சேலை பலவகையான நிறங்களோடு இருக்கும் - ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு - சிவப்பிலே எத்தனை வகைகளுண்டோ அத்தனையும்-மெரினாவை அடுத்துள்ள கடலின் நீலப்பச்சை, அல்லது இரவு வானத்தின் கருநீலம் என்றிப்படி, பெரும்பாலும் தங்க ஜரிகை, சேலையின் கரைகளிலே மின்னும். சிலசமயங்களில் அந்தத் தோட்டத்திலே குழந்தைகள் காட்சியளிப்பார்கள்; ஆனால் அவர்கள் அந்த அம்மாளின் குழந்தைகளா என்பது ஜூடிக்கு நிச்சயமாகத்