பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31

சென்று அதைத் தடவிக்கொடுத்தாள். பசு தன் கன்றை நக்குவதை நிறுத்திவிட்டு மலர்ந்த அமைதியான கண்களோடு அவளை நோக்கிற்று.

பெஞ்சமின் மாம்பழத்தைத் தின்று முடித்துவிட்டான். அவன் முகமெல்லாம் வடவடவென்றிருந்தது. உடம்பெல்லாங்கூட அப்படித்தான். ஒரு மூலையிலே தண்ணீர்க் குழாயிருந்தது. “அதை உபயோகப்படுத்தலாமா?” என்று ஜூடி தயக்கத்தோடு கேட்டாள்.

“தாராளமாக உபயோகிக்கலாம். ஒரு நல்ல நாளிலே உன் தம்பி எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். வெள்ளிக்கிழமை நல்லநாள் - அது உனக்குத் தெரியுமா?” என்றாள் அந்த அம்மாள், ஜூடி தலையை அசைத்தாள். அவளுடைய பள்ளித் தோழிகளெல்லாம் அவ்வாறு தான் கருதினார்கள். ஜூடி பெஞ்சமினை ஒருவாறு கழுவித் தனது அங்கியின் ஓரத்தைக்கொண்டு துடைத்தாள்.

“கொஞ்சம் காப்பி சாப்பிடலாம்” என்று கூறினாள் அந்த அம்மாள்.

ஜூடி தயங்கினாள்; குனிந்து தன் உடையைக் கவனித்தாள். இன்னும் கொஞ்சம் நல்ல உடையை அணிந்திருக்கவேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனால் அந்த அம்மாள் அதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் அவர்களைத் தாழ்வாரத்திற்கு அழைத்துச் சென்றாள். பெரும்பாலான தென்னிந்திய இந்துப் பெண்மணிகள் தம் வீட்டிற்கு வெளிப்புறத்தில் அரிசிமாவைக் கொண்டு போடுவது போன்ற சிக்கலான அமைப்புள்ள கோலம் இருந்தது, அதை மிதித்துக்கொண்டு அவர்கள் சென்றனர். அந்த அம்மாள் செருப்பைக் கழற்றி விடுவதை ஜூடி கவனித்தாள். பின்புறம் தோல் பட்டையிட்டுக்