பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

திடீரென்று ஒரு சிறுமி வீட்டிற்குள்ளிருந்து ஓடிவங் ஜூடிக்கு முன்னால் சடக்கென்று நின்றாள். ஜூடியைவிட அவள் கொஞ்சம் பெரியவள். இளஞ் சிவப்பான புள்ளிகளையுடைய ஒரு சேலையை அவள் உடுத்திக்கொண்டிருந்தாள். அவள் தலையிலே வாடாத புதிய மலர்கள் இருந்தன. “ஹலோ” என்று அவள் கூவினாள்.

“யார் நீயா!” என்று ஜூடி ஆச்சரியத்தோடு மொழிந்தாள்.

இரண்டு பேரையும் அந்த அம்மாள் நோக்கினாள். “லட்சுமிக்கும் உனக்கும் பழக்கமுண்டா?” என்று அவள் கேட்டாள்.

"ஆமாம், தண்ணீாிலே மூழ்கிச் செல்வதில் அவள் ரொம்ப கெட்டிக்காரி, உயரத்திலிருந்து அப்படியே குதிப்பாள். ஆனால் அவள் இங்கிருக்கிறாளென்று எனக்குத் தெரியாது” என்றாள் ஜூடி.

அந்த அம்மாள் சிரித்தாள். “அம்மணிப் பாட்டியோடிருக்க நான் சில சமயம் இங்கே வருவேன். அம்மணிப் பாட்டியென்றால் எங்கள் பாட்டி அம்மணி” என்று விளக்கினாள் லட்சுமி. அவள் கொஞ்ச நேரம் அந்த அம்மாளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றாள். “வேலிக்கு அக்தப் புறத்திலே யாரோ ஒரு சிறு பெண் இருக்கிறாளென்று எனக்குத் தெரியும். ஆனால் அது நீயென்று தெரியவே தெரியாது.”

“வேலியிலே புகுந்து பெஞ்சமின் இந்தப் பக்கம் வந்து விட்டான்” என்று ஜூடி சொல்லத் தொடங்கினாள். பழக்கமில்லாத ஒரிடத்திலே இருப்பதை பெஞ்சமின் அப்பொழுது உணர்ந்தான். ஆயாவைப் பற்றிக் கேட்டான்,