பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

“அவர் எந்த வகையான எஞ்சினியர்?” என்று கேட்டாள் ஜூடி.

“பெரிய அணைக்கட்டுத்திட்டம் ஒன்றில் அவர் உதவியாளராக இருந்தார். அவரைப்பற்றிப் புகழ்ச்சியாகப் பேசுவார்கள். ஆர்வம் நிறைந்தவர். நேர்மையும் உடையவர்” என்று தந்தை சொன்னார்.

தந்தை சொல்வதின் பொருள் அவளுக்கு விளங்கிற்று. லட்சுமியின் தந்தை லஞ்சம் வாங்கவில்லை. அவர் சிரமப்பட்டு உழைத்தார். அவர் எப்பொழுதும் நியாயமில்லாமல் லீவ் எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும் மேலே அவர் திருத்தமாக வேலை செய்தார். திருத்தமாகச் செய்தல். இந்தச் சொற்றொடர் அவள் தந்தைக்கு மிகவும் பிடித்தமானவைகளில் ஒன்று. அவளுடைய அண்ணன் ஜான்கூட இதைக் கற்றுக் கொண்டான். அவன் எழுதிய கடைசிக் கடிதத்தில் கிரிகெட்டைப் பற்றியே எழுதியிருந்தான். பந்தைச் சரியாகப் பார்த்து எப்படி அடிக்கவேண்டும் என்பதை விளக்கியிருந்தான். கிரிக்கெட் மட்டையை ஒவ்வொரு வகையாகப் பிடித்து அடிக்கும் பொழுது பந்து எவ்வாறு போகிறது என்பதைக் காட்ட அவன் சில படங்களும் வரைந்திருந்தான். எல்லாம் வடிவு கணிதத்தைப் போல ஒரே தலைவலியாக இருந்தது. மேலும் கிரிக்கெட்டை நினைத்தாலே ஒரே சூடாகத் தோன்றிற்று.

சென்னையிலே சிலசமயங்களில் மாலை நேரங்களிலே கிரிக்கெட் பந்தயம் நடந்தது. வெய்யிலிலே உருகிக் கொண்டு வெறிபிடித்தவர்களைப் போல ஓடுவார்கள். பார்க்கவே சகிக்காது. கோடை காலத்திலே நிழலுள்ள ஒர் இடத்திற்குச் சென்று அங்கே அமர்ந்தால் அதுவே போதும் - மாம்பழம் கிடைத்தால் நல்லது. அடையாற்றில்