பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சேரியிலே மக்கள் சமையல் செய்துகொண்டும், பாத்திரங்களேத் துலக்கிக்கொண்டும், குளித்துக்கொண்டும், துணிகளேத் துவைத்துக்கொண்டும் இருந்தார்கள். அங்கே யும் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். அங்குமிங்கும் சோற்றையோ பகுப்புக் குழம்பையோ கைகிறைய வாங்கி அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சொக்தமான வீடில்லே என்பது மெய்தான் போலும்! இருக்தாலும் ஜூடிக்குப் பிச்சைக்காரர்களைக் கண்டால் பிடிக்கவில்லே. ஆலமரத்தைப்பற்றி ஒரு நல்ல விஷயம் என்னவென் ருல் அங்கே பிச்சைக்காரர்கள் இல்லை. ஒரு காள் அவள் அங்கே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், மரத்தின் உச்சியிலே இலைகளுக் கிடையிலே ஒடியாடிக்கொண்டிருந்த அழகான வண்ணப் பறவையைப் பார்க்க முயல்வதிலே தான் உண்மையில் அவள் காட்டமிருந்தது. அதை மட்டும் கன்ருகப் பார்க்க முடிந்தால் அந்தச் சமயத்தில் லட்சுமி தனது காட்டிய உடைகளே அணிந்து கொண்டு அங்கே ஓடிவந்தாள். பச்சை நிறத்திலே பைஜாமர கணுக்காலுக்குப் பக்கத்திலே அது இறுக்கமாக இருக்கும். மேலே ஒரு இளஞ்சிவப்பான தாவணி. அவள் ஜூடியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, காட்டியத்தை வந்து பார்’, என்று சொல்லி கலா சேஷத்திரத்தைச் சேர்ந்த பகுதிக்குள் இழுத்துக்கொண்டு சென்ருள். அங்கே லட்சுமியின் காட்டிய வகுப்பு கடை பெற்றது. லட்சுமி பள்ளிக்குச் செல்வதைத் தவிர வேறு காரியங்களும் செய்வதை ஜூடி எப்பொழுதும் கண்டாள். அது அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கிற்று. லட்சுமிக் குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அவளுக்குப் பள்ளிப் படிப்பு பெரிதாக இருக்கவில்லை என்று சில சமயங் களில் தோன்றிற்று.