பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தென்னங்கீற்ருலான காட்டியப் பயிற்சிக்கூடம் சுத்த மாகவும் அழகாகவுமிருந்தது. ஏற்றிவைத்த விளக் கோடும், மலர்களோடும் அது விளங்கிற்று. அதன் ஒரு மூலையில் லட்சுமி ஜூடியை உட்கார்ந்து பார்க்கச் செய்தாள். அங்கே பத்துப் பன்னிரண்டு சிறுமிகள் இருக் தனர். ஜூடிக்கு அவர்களில் இருவரைத் தெரியும். எல் லோரும் லட்சுமியைப் போலவே பைஜாமாவும் தாவணியும் அணிந்திருந்தார்கள். எல்லோருடைய தலையிலும் ஜடை ஆரம்பிக்கும் பகுதியிலே இனிய வாசனையுடைய மலர்கள் குவியலாகத் தோன்றின. கூரையிலிருந்து தொங்கும் நாடாக்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருத்தி பிடித்துக் கொண்டு காட்டியமாடினுள். வீணையும், மிருதங்கமும் இசை கூட்டின. புத்தகத்தைப் போலச் சிறிய வடிவமுள்ள சுருதிப் பெட்டி காற்றை உள்ளே புகுமாறு செய்யத் திறந்தும் மூடியும் வேடிக்கையாகத் தோன்றிற்று. இது ஒரு கிராமிய நடனம்” என்று லட்சுமி கூறினுள். வர்ணங் தீட்டி மலரலால் அணி செய்யப்பெற்ற கம்பத்தைச் சுற்றி இங்கிலாந்திலே கிராம மைதானத்தில் ஆடும் ஒருவகை கடனத்தைக் குறிப்பிடும் பழைய படங்களேயும், கதைப் புத்தகங்களையும் ஜூடிக்கு இது கினேவுக்குக் கொண்டு வந்தது. 'இப்பொழுது கான் பரத நாட்டியம் பயிலப் போகிறேன்” என்று லட்சுமி தன் தாவணியை இறுக்கிக் கட்டிக்கொண்டு கூறினுள். 'பரத நாட்டியம் என்ருல் இந்தியாவின் கடனம் என்று பொருள். கடவுளுக்காக அர்ப் பணம் செய்யப்பட்ட பெண்களால் இது கோவில்களில் மட்டும் முன்பு ஆடப்பட்டது. இன்று இது எல்லோருக்கும் சொந்தம். இருந்தாலும் இது இப்பொழுதும் ஒருவகை யான பிரார்த்தனைதான். இது ஆனந்தமோ, புகழ்ச்சியோ. எனக்கே நிச்சயமாகத் தெரியாது. நீயே பார்.”