பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஒரு சிறிய அறைக்குள்ளே அவர்கள் சென்றனர் மிதியடிகள் என்றுமே அங்கு மாசுபடுத்தாததால் தரை பிரகாசமாகவும் மிருதுவாகவுமிருந்தது. அங்கு வாத்தி பங்கள் இல்லை; லட்சுமியின் ஆசிரியர் பாடிக்கொண்டே ஒரு கட்டையால் தாள ஜதிகளைத் திறமையோடு தட்டினர். முதல் காட்டியம் உடம்பிலே மூட்டுக்களுக்கும் தசை நார் களுக்கும் நெகிழ்ச்சி யுண்டாக்குவதற்காக ஏற்பட்டது. தன் கண்களுக்கு முன்னலேயே லட்சுமி மாறுதலடைவது போல ஜூடிக்குப்பட்டது. தன்னை யிழந்து அவள் காட்டி யத்தின் உருவாகவே ஆவதுபோலத் தோன்றிற்று. கிற்கும் கிலைகளும் அபிவயங்களிலும் பயிற்சி பெறுகின்ற இரண் டாவது கடனத்திலே இது முன்னும் அதிகமாகத் தென் பட்டது. லட்சுமியின் கண்களும், கழுத்தும் ஒரு பக்கத்தி லிருந்து மறுபக்கத்திற்குச் சுழன்றன; பாம்புகளைப் போலக் கரங்கள் நெளிந்தன; முழங்கால்களும், இடுப்பும் ஒல்கி வளைந்தன. மலர்களாகவும், உயிருள்ள சீவன்களாகவும் விரல்கள் குவிந்து தோற்றமளித்தன. திகைக்கச் செய்யும் ஒவ்வொரு ஜதிக்கும் ஒரு பொருள் உண்டு- ஒரு மென்மை, அல்லது கடனத்திலே ஒரு கணத்திற்குப் புலி யொன்று வருவதுபோல உள்ளத்தைக் குலைக்கும் ஒரு உக்கிரம். தரையில் அமர்ந்திருந்த ஜூடி இவ்வாறெல்லாம் மாறக் கூடிய லட்சுமியை அவள் கன்கு புரிந்துகொண்டதுண்டா என்று ஆச்சரியமடைந்தாள். தாள ஜதிகள் ஓய்ந்தன. லட்சுமி தன் கூந்தலைப் பின்னுக்குத் தள்ளி ஒழுங்கு செய்து கொண்டாள். உடம்பெல்லாம் வேர்த்தது. அவள் பழையபடி லட்சுமி ஆளுள். 'ஒரு நாளேக்கு நான் கன்ருக நாட்டியடிாடுவேன் என்று கம்புகிறேன்’ என்ருள் அவள்.