பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


49 பார்க்கலாம். மின்சார விசிறிகள், குளிரூட்டும் பெட்டி முதலி யவை எல்லாம் அங்கு சரிவர வேலை செய்வதாகத் தோன்றிற்று. அங்குஏராளமான புத்தகங்களிருந்தன.ஆனல் அவற்றில் பெரும்பாலானவை பொறியியலேப் பற்றியவையே தான். பறவையைப் பற்றிய சீன தேசத்துப் படம் ஒன்று அங்கே இருந்தது. ஒரு சில கோடுகளாலும், வர்ணப் புள்ளிகளாலும் ஆன அந்தப் படம் திருத்தமாக வரையப் பட்டிராவிடினும் அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. லட்சுமியின் தாய் நல்லவள் , அழகானவள். அவளுக்கு ஆங்கிலம் அதிகமாக வராது. லட்சுமியின் தந்தை பெரும் பாலும் எப்பொழுதும் அவசரத்திலேயே இருப்பார். அவ்வாறு அவசரப்படாத சமயங்களில் அவர் மிகவும் தமாஷாகப் பேசுவார். லட்சுமியிடத்திலே அவருக்கு மிகமிகப் பிரியம் உண்டு. அங்த மாடிக்கு ஜூடி அடிக்கடி போகமாட்டாள். வேலிக்குப் பின்புறமுள்ள வீட்டிற்கு லட்சுமி வரும்போது ஜூடி வேலிச்சக்தில் நுழைந்து அங்கு செல்லுவாள். அவள் அப்படி வருவதைக்க ண்டு அவளே வரவேற்பார்கள் என்ற கம்பிக்கையோடு அவள் போவாள். லட்சுமியின் பாட்டனு ரைப் பற்றி அவளுக்கு என்றுமே கிச்சயமேற்படவில்லை. அவள் ஒரு உண்மையான மனிதப்பிறவி என்ற எண்ணமே அவருக்கு உண்டாகவில்லைபோலும். லட்சுமியின் தங்கை சரசுவதி ஒன்றிரண்டு தடவை அங்கு வந்து தங்கினுள். அவள் சாதாரணமான ஒரு சிறு பெண். லட்சுமியின் தம்பி யான கந்தன் அடிக்கடி அங்கு வருவான். அவன் போடுகிற சத்தத்திலிருந்து அவன் வந்திருப்பதைத் தெரிந்துகொள்ள லாம். அவன் எப்பொழும் சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டு கூச்சலிடுவான். லட்சுமியின் மற்ருெரு தங்கையான குழங்தை பார்வதிதான் மிகஅதிகமாக அங்கு வந்திருப்பாள்,