பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53 லாம். மற்ருெரு படம் ஏரிக்கருகில் கின்ற ஒரு மங்கையைக் காட்டுவது. அவளுடைய சேலே பின் புறத்திலே காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அவள் கையில் ஒரு கண் ளுடியை வைத்திருந்தாள். அத்தக் கண்ணுடியிலே அவ ளுடைய உருவம் மிகச் சிறியதாகத் தோன்றிற்று. மெல்லிய கால்களும் பெரிய கண்களும் உடைய புள்ளி மான்கள் அவளுக்குப் பக்கத்திலே துணிச்சலோடு வந்தன. நீண்ட கால்களும் வளைந்த அலகுகளும் உடைய ஒரு சில பறவைகளும் காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நேரத்திலே பாடக்கூடிய ஒரு இராகத்தை இது காட்டுகிறது என்று அம்மணிப்பாட்டி தெரிவித்தாள் ஜூடிக்கு இந்தப் படங்கள் மிகவும் பிடித்திருக்கின்றனவென்று தெரிந்தவுடன் அம் மணிப்பாட்டி செதுக்குவேலே செய்யப்பெற்ற ஒரு பெட்டி யிலிருந்த வேறு மூன்று படங்களையும் அவளுக்குக் காண் பித்தாள். துதிக்கைகளே ஒன்றின்மேல் ஒன்று மோதிப் போரிடுகின்ற யானைகளின் படமொன்று. வேல் தாங்கிய சிறு மனிதர்கள் அவைகள் போரிடுவதை கோக்கிக் கொன் டிருந்தன. கிமிர்ந்து கம்பீரமாக அமர்ந்துள்ள ஒருவனக் காட்டுவது இரண்டாவது படம். பாலேடு போன்ற நிறத் துடனும், மூர்க்கமான நோக்குடனும் உள்ள சதங்கை கட்டிய அழகிய இராசாளி ஒன்று அவன் மணிக்கட்டில் அமர்ந்திருந்தது. புயல் வெடிக்கும் வானத்தின்கீழ் அவன் குதிரையேறிச் சென்ருன் சாம்பல் நிறமுடைய அக் குதிரையின் கால்கள் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டிருந்தன ; முகமும் வாலும் கறுப்பாக இருந்தன. ஒவ்வொரு இறகையும் அழகாக வண்ணம் தீட்டிய கெளதாரியின் படம் மூன் ருவது. தன் தந்தைக்குக்கட்ட பிடிக்கும்படியாக அது அவ் வளவு திருத்தமானது என்று ஜூடி கருதினுள். அவை யெல்லாம் பழைய ஓவியங்கள் ; வெகுகாலமாக இந்தக் குடும்பத்திலேயே இருக்கின்றன ; அவற்றை வைத்திருந்த