பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 பெட்டியும் அப்படித்தான் என்று அம்மணிப்பாட்டி தெரிவித்தாள். முன்பக்கம் கண்ணுடியாலான ஒரு பெட்டிக்குள் வீணே யொன்று இருந்தது ; அதன் குடமும் தண்டியும் தக்தப் பூவேலை செய்யப்பெற்றிருந்தன. சிலசமயங்களில் அம் மணிப்பாட்டி அதை எடுத்து வாசித்துக்கொண்டு கடுங்குங் குரலிலே, பெரும்பாலும் திடீரென்று தாளம் மாறும்படியான சோக கீதங்களைப் பாடுவாள், பள்ளியிலே பெண்கள் பாடு கின்ற சினிமாப் பாடல்களிலிருந்து அவை முழுதும் மாறு பட்டவையாகத் தோன்றின. அந்த வீட்டிலே கல்ல பெட்டிகள் நிறைய இருந்தன. பண்டசாலையிலே உள்ள அஞ்சறைப் பெட்டிகளும், அரிசி, பருப்பு முதலியவைகளுக்கான பூட்டுள்ள பெரிய பெட்டி களும் இவற்றுள் முக்கியமானவை. நறுமணப் பொருள் களிலிருந்தும், பழங்களிலிருந்தும் எப்பொழுதும் ஒரு நல்ல வாசனை வீசிற்று. ஒரு வகையில் பூஜை அறைதான் எல்லா அறைகளையும் விட அதிகமான உணர்ச்சியூட்டுவதாகும். அது ஒர் அமைதியான சிறிய அறை. காலுக்குக் குளிர்ச்சி யாக இருக்கும் அந்த அறையில் தளம் பளபளப்பானது. குத்து விளக்கும் மலர்களும் தெய்வங்களின் படங்களும் அங்கிருந்தன. அந்த அறைக்கு ஜூடியை அழைத்துச் செல்வதில் அம்மணிப்பாட்டிக்கு யாதொரு தடையும் தோன்றவில்லை. அவளும் அந்த தெய்வங்களும் ஒரே பொரு ளின் பாகங்களென்று தோன்றுமாறு அவள் தனது இஷ்ட தெய்வங்களைப் பற்றிக் குடும்ப விஷயம் பேசுவதைப் போலப் பேசுவதுண்டு.