பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


荔努 பெற்று அணிந்திருந்தனர். மெலிந்து சோகப் பார்வை யோடு தோன்றும் பெண்கள் தங்கள் கரங்களிலே கண்ணுடி வளையல்களை அணிந்திருந்தார்கள். வெள்ளித் தாயத்து அல்லது காப்பை அவர்கள் சில சமயங்களில் அணிவதுண்டு. அப்படி அணிந்திருந்தால் குடும்பத்திலே சேமித்து வைத்த பணத்தை அவர்கள் உடம்பிலேயே சுமந்துகொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ள லாம். அந்தக் கீழ்ஜாதி மக்களெல்லோரையும் பற்றி டாக்டர்களில் ஒருவர் ஜூடியின் தாய்க்கு எடுத்துச் சொன்ஞர். ஆஸ்பத்திரியிலே ஜாதிமத பேதங் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். 'அங்கே இருக்க முடியாதென்றுதான் கான் நம்புகிறேன்” என்று ஜூடியின் தாய் வெடுக்கென்று கூறினுள். நோயாளிகளைப் பேணும் தாதிகளிற் சிலர் அங்கே மிக காகரிகமாகத் தோன்றினர். ஜூடிக்கு ஊசிபோட்ட போது உதவி செய்த அந்த கல்ல தாதி அவர்களிலே முக்கியமானவள். மற்ற தாதிகளெல்லாம் ஆஸ்பத்திரி அறைகளில் நோயாளிகளுக்கு கல்ல தேநீரைக் கொஞ்சம் அதிகமாகவே வழங்கிக் கொண்டிருந்தனர். நோயாளி களுக்கும் சொற்பொழிவுகள் உண்டு. அவர்களுக்கு அவை ஒரு வேளை பிடிக்கலாம். ஆஸ்பத்திரி அறைகளிலே ரேடியோ கிடையாது; நோயாளிகளில் ஒரு சிலருக்கே படிக்கத் தெரியும்; ஆதலால் சொற்பொழிவுகsட அவர் களுக்கு வரவேற்கக்கூடிய தனிச் சிறப்புடையதுதான். ஜூடியின் தந்த ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டி யிருக்தது. அது அவளுக்கு சங்கடத்தை விளைவித்தது. ஆளுல் மற்றவர்களெல்லாம் அதை விரும்பிஞர்கள். அவ ருக்கு அவர்கள் ஒரு பெரியமாலை அணிந்தார்கள். வெள்ளே, மஞ்சள், இளஞ்சிவப்பு கிறங்களையுடைய நறுமண மலர்