பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 யாராவது இதைக் கேட்டுக் கோபமடைவார்கள் என்று ஜூடி எண்ணிக்கொண்டிருந்தாள். அந்த டாக்டரின் மனைவி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை யென்றும், யாராவது கேட்கட்டும் என்பதே அவளுடைய விருப்பம் என்றும் ஜூடிக்கு திடீரென்று தெரிந்தது. வயதுவந்தவர்களெல் லாம் எத்தனை மோசமானவர்கள் ! அப்பொழுது கல்ல தோற்றமுடைய பையன் ஒருவன் ஓடி வந்தான்; சிலரைவிட அவன் சற்று வெளுப்பானவன். அவனுடைய தலம்யிர் சுருண்டு கறுப்பாக இருந்தது. ' என் மகன் ஹரிதாஸ் ’ என்று அவள் சொன்னுள். அந்தப் பையன் கை குலுக்கி விட்டுச் சிரித்தான். அவர்கள் இருவருடைய தாய்மார் களும் மீண்டும் தமக்குள் உரையாடத் தொடங்கவே அந்தப் பையனும் ஜூடியோடு பேசத் தொடங்கினன். யாரோ ஒருவன் கேந்திரங்காய் வறுவலை ஓர் இலையில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தான். அது உருளைக்கிழங்கு வறு வலைப் போலவே இருந்தது ; ஆளுல் ருசி அதிகம். இருவரும் அதைக் கையில் எடுத்தார்கள். அப்பொழுது கயிறிழுக்கும் பந்தய விளையாட்டுத் தொடங்கிற்று. ஒவ்வொருவரையும் அதில் சேரும்படி வலிய அழைத்தனர். தனது வாழ்க்கையிலேயே அவ்வளவு பெரிய ஆரவாரத்தைக் கேட்டதில்லை என்று ஜூடிக்கு எண்ணம் உண்டாயிற்று. ஒவ்வொருவரும் ஆரவாரம் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபத்தோடிருப்பதுபோலத் தொனித் தது. ஆல்ை உண்மையில் அவர்கள் குதுகலத்தோடிருங் தனர். அவருடைய தந்தையின் கட்சி வெற்றியடைந்த போது குதுாகலம் இன்னும் அதிகரித்தது. பிறகு சிறுவர் களுக்குக் கயிறிழுக்கும் பந்தயம் வைத்தனர். சிறுமிகள் தங்கள் சேலைகளை வரிந்து கட்டினர். தாங்கள் மிகுந்த பலசாலிகள் என்று பையன்கள் பாவனை செய்தனர்,