பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இருக்கும். ஆனல் தென்னிந்தியாவை அசுத்தமானதென்று. அவள்சொல்லுவதானது-சரிசரிசென்னைமக்கள் வடஇந்தியா வைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்டுப் பார்த்தால்தெரியும் ஹரிதாஸ் தங்கள் வீட்டிற்கு வந்திருந்த ஒகுசமயம் ஜூடி அவனை வேலியிலுள்ள சந்து வழியாக அண்டை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கினைத்தாள். ஆனல் அதல்ை பயனேற்படாது என்று பிறகு அவளுக்குத் தோன்றிற்று. எல்லோரும் நீந்திக் கொண்டிருக்கும்போது லட்சுமியுடனும் அவளுடைய தோழிகளுடனுமோ அல்லது ஹரிதாஸுடனே நீரில் மூழ்கிச்செல்ல அவள் விரும்பினுள் வயதான இந்தியப் பெண்களுள் ஒரு சிலர்தான் குளத்தில் நீங்துவார்கள்; அவர்களுள் ஒருத்தி ஹரிதாஸின் தாய். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளோடு வரு வார்கள். ஆனல் ஐஸ் பண்டங்களையோ தேநீரையோ அருங் திக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். 'எனக்கு ஒரு டஜன் குழந்தைகளிருந்தாலும் நான் அப்படியிருக்கமாட்டேன்’ என்று கறிஞள் லட்சுமி. மழைக்காலம் உண்மையாகவே தொடங்கிவிட்டது. வானமெங்கும் இடியின் முழக்கம் கேட்டது. சாலைகளிலெல் லாம் வெள்ளம் பெருகிப் பெரிய குட்டையாக கின்றது. ஆளுல் காய்ந்து கிடக்கும் தரைக்குள்ளே அது சீக்கிரத்தில் மறைந்து போயிற்று. எங்கும் நீராவி யெழுந்தது. மக்கள் சிடுசிடுத்தனர். ஒரு வாரம் பெஞ்சமினுக்கு உடம்பு சரியில்லை; எல்லோருக்கும் அது கவலையாக இருந்தது. அம்மணிப்பாட்டி மிக நல்ல பழங்கள் சிலவற்றை அனுப்பி வைத்தாள். அவற்றைக்கூட அவன் விரும்பவில்லை. பிறகு அவனுக்குக் கொஞ்சம் சுமாராயிற்று; ஆனல் முழுவதும் குணமேற்படவில்லை. ஜூடியின் பள்ளி மூடியதும் எல் லோரும் மலைக்குச் செல்வதென்று திட்டம் வகுக்கப்பட்டது;